பக்கம்:பச்சைக்கனவு.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

víí

ஏனெனில்

யாவும் நீத்தபின் காக்க என்ன இருக்கிறது? பிறகு காப்போன் யார்? யாராயிருப்பினும் காக்கும் நோக்கம் என்ன? எல்லாமே கனவு. கனவு காட்டலின் களவு காட்டல். பச்சைக் கனவின் பச்சைக் களவு. பச்சைக் கனவுதான். பச்சைப்புளுகு அல்ல. கனவுகள் புளுகுகள் அல்ல. கனவுகள் உண்மையின் நிழல்கள். காலையின் பொன்வெய்யில் முன்தோற்றும் நிழல். மண்டைபிளக்கும் உச்சிவெய்யிலிலும் விடாது காலடியில் ஒட்டிக் கொண்டிருக்கும் துணை நிழல். மாலையின் மஞ்சளில் பின்சாய்ந்த குடைநிழல். இப்பக்கங்களுக்கிடையில் நிகழும் நிழல்கள், நீயும் நானும் நாமும் புகுநத கனவுகள.

இன்றில்லையெனில் நாளை. நாளையில்லையெனில் என்றோ ஒரு நாள். -

கண்டுகொள்ளும் கனவுகள். அதைப்பற்றி எனக்குத் துளிக்கூடச் சந்தேகமில்லை.

நான் களவு காட்டும் முகம். யார் முகம் கண்டுகொண்டு விட்டேன். உனக்குத் தெரியவில்லை? இன்னும் தெரிய வில்லை??

தெரியாவிட்டாலும் பரவாயில்லை? தெரியும்வரை கனவு காண்பாய்; தெரிந்தபின் களவு காண்பாய்.

கனவுகாட்டும் களவின் ஆளவுமுகம் கண்டுகொண்டதும், நீயும் ஆனந்தக் கூத்தனாகிவிடுவாய். பிறகு யாரைப்பற்றி உனக்கென்ன?

லா. ச. ராமாமிருதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/8&oldid=590662" இலிருந்து மீள்விக்கப்பட்டது