பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யானையை வென்ற வெள்ளை முயல்

137



‘தூது செல்பவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றால், தாம் சொல்லுகின்ற செய்தி கேட்கின்றவர்களுக்குக் கோபத்தை யுண்டாக்கக் கூடியதாக இருந்து, அவர்கள் வாளையுருவிக் கொண்டு தம் மேற் பாய வந்தாலும், பதைப்படையாமல், கூறவேண்டியதைக் கூறி முடித்தே ஆக வேண்டும். தூதுவர்கள் என்ன கூறினாலும், அவர்கள் பகையரசர்களுடைய ஆட்களாயிருந்தாலும், மிகுந்த அறிவுடைய அரசர்கள் அவர்கள்மேற் கோபம் கொள்ளக் கூடாது.

'உடல் வலி தனக்கு இருக்கிறது என்பதற்காக பெரியவர்களோடு பகைத்துக் கொண்டால், பின் அவர்களால் வெல்லப்பெற்று உயிரையும் இழக்க நேரிடும். முதலிலேயே அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல் வணங்கிப் போற்றினால், உயிர் பிழைத்துக் கொள்ளலாம். மூன்று கடவுள்களிலும் முதல் கடவுளான சிவபெருமானுடைய திருமுடியில் வாழும் எங்கள் நிலாவரசரின் பகைமையைத் தேடிக் கொள்ளாமல், நீ இந்தச் சுனையை விட்டுப் போய் விடுவதே நன்று. நீ வீணாக எங்கள் அரசருடைய கோபத்துக்கு இலக்காகக் கூடாதே என்பதற்காக நான்தான் இவ்வளவு கூறினேன். நிலாவரசர் உன் மேல் கொண்டிருக்கும் கோபம் கொஞ்சநஞ்சமல்ல. நீ இப்பொழுதே உன் யானைக் கூட்டங்களுடன் திரும்பப் போய்விட்டால், தான் அவருடைய


ப—9