பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவ்வன்பர்கள், கோயிலுக்கு அணித்தாக உள்ள குளத்துக் குளிர்ந்த நீரில் மூழ்கி எழுந்து, கோயிலுள் புக, புகுந்த அவ்வன்பர்கள் திருமகள் வீற்றிருக்கும் மார்பின்மீது. வண்டுகள் வந்து மொய்க்குமளவு தேன்துளிர்க்கும் மணம் வீசும் துளசியைக், கொத்துக் கொத்தாக வைத்துக் கட்டிய மாலைகிடந்து அணிசெய்ய, காண்பவர் கண்களைக் கூசச் செய்யும் ஆழிப்படையைக், கை ஏந்தி நிற்க, தன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி, வாழ்த்தி, மனம் நிறை மகிழ்ச்சியோடு விடை பெற்று செல்லும் காட்சி தரும், திருவனந்தபுரத்துத் திருமாலின் கோலத்தைக் காட்டும், பதிற்றுப் பத்தின் பெருமை பாராட்டற்குரியது.

'மண்கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால்வேறு நனந்தலை ஒருங்கெழுந்து ஒலிப்பத், தெள்ளுயர் வடிமணி எறியுநர் கல்லென உண்ணுப் பைஞ்ஞலம் பனித்துறை மண்ணி, வண்டுது பொலிதார்த் திருளுெமர் அகலத்துக் கண்பொரு திகிரிக் கமழ்குரல் துழாஅய் அலங்கற் செல்வன் சேவடி பரவி நெஞ்சுமலி உவகையர் துஞ்சிபெயர’’.

-பதிற்றுப் பத்து: 31: 2-10.

90