பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாம் எனக் கூறுகிருர், இத்தகு ஆண்மையின் சிறப்புணர்ந்த புலவர், அவ்வாண்மையின் இன்றியமையினை, உணர்த்த, 'துளங்கு குடி திருத்திய வலப்படு வென்றி' எனஒரு தொடரில் சுருங்கிய வாய்பாட்டால் உணர்த்துமிடத்து, ஒரிடத்திற்கு ஈரிடத்திலும் (பதிற்றுப்பத்து : 22 :7) : (37 : 7)

'துளங்கு குடி விழுத்துணை திருத்தி, முரசுகொண்டு, ஆண்கடன் இறுத்த நின் பூண்கிளர் வியன் மார்பு’’

(பதிற்றுப்பத்து : 31; 13-14) என்ற ஒரிடமே ஆயினும், இரு வரிகளில் எடுத்து உணர்த்தியிருக்கும் திறம், ஒவ்வொருவர் உள்ளத்திலும், நின்று நிலைபெற வேண்டிய பேரறமாம்,

தமிழகம், துதல்விழி நாட்டத்து இறையோன், பிறவா யாக்கைப் பெரியோன், அறுமுகச் செவ்வேள், வால்வளை மேளி வாலியோன், நீலமேனி நெடியோன் முதலாம் பல்வேறு கடவுளர்களின் தெய்வத் திருமேனிகள் இடம் கொண்ட கோயில்கள், பண்டு தொட்டே இருந்து வருகின்றன. அக்கடவுளர், திருமேனிகளில் நீலமேனி நெடியோன் திருமேனி இடங்கொண்டிருக்கும் பல்வேறு இடங்களில், திருவனந்தபுரமும் ஒன்று என்ற உண்மையினை உணரத் துணைபுரிவது பதிற்றுப்பத்து.

தமிழகத்துப் ப ல் வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எல்லாம், கைகள் தலைமேல் கூப்பிக்கிடக்க வாய், தன் பெரும்பெயரை, உலகத்தவர் காதுகள் செவிடுபடப் புகழ்ந்து பாட, வந்துகுழுமியிருந்த நிலையில், திருக்கோயில் திருமணி, வழிபடற்குரிய காலம் இது என்பதை உணர்த்த, கலீல் கலீல் என ஒலிக்கக் கேட்டதுமே, பெருமாளைக் கண்டு வழிபட்ட

பின்னர் அல்லது உ ண் .ே ண ம் என விரதம் பூண்ட,

89