பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெயர் பூண்ட ஒரு குறுநிலத்தலைவன், நெல்வளம் மிக்க நாடுடைமையால் செருக்குற்றுச் சேரநாட்டவரோடு பகை கொண்டாளுக, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலாதன், தன் நாற்படைக்குப் பெருமையளிக்கும் யானைப்படையோடு சென்று, அந்நெடுமிடலைக் கொன்று, அவன் நாட்டையும் அழித்தான்்.

வெற்றிமிகு வேந்தனய் வா ழ் ந் த களங்காய்க்கண்ணியான்பால், பாராட்டத்தக்க வேறுபல பண்புகளும் பொருந்தியிருந்தன. பகைபோக்கி வாழ வேண்டும் என்ற பேருள்ளம்கொண்ட அவன், அந்நிலையை எவ்வகையாலேனும் அடைந்து விடுதல் வேண்டும் என்று எண்ணி, அறம் மறந்து அமர்புரிவானல்லன். தோற்று ஒடும் பகைவர்மீது படை. தொடாப் பேராண்மை, தன் படைவீரர் மாட்டும் பொருந்தியிருத்தல் வேண்டும் என்பதில், விழிப்பாய் இருந்தான்் அவ்வேந்து. போர்மேற்கொண்டு சென்று பகைவர் நாட்டில் பாசறை அமைத்து வாழும் நிலையிலும், அவன் கழிபெரும்சினங்கொள்ளாது பொறுமையே மேற்கொண்டிருப்பன்.

இவ்வாறு அறவழி ஒம்பும் அறிவுடைப் பெருமகளுய் விளங்கினமையால், அவன், தன் ஆட்சிக்கீழ்வாழும் தன்னுட்டு மக்களின் தளர்ச்சியைப் போக்கி, அவர்களை ஒழுக்கம் மிக்க உயர்ந்தோர்களாக வாழ வைத்து வான்புகழ் பெற்ருன். வளமும் வள்ளன்மையும் வாய்க்கப்பெற்ற வண்டனேபோல், தன் ப ைடத் து அண ய ர ல் வற்ருப்பெருவளம் பெற்றும், அவ்வளத்தை வரையாது வழங்கி வான்புகழ் பெற்றும் வாழ்ந்தான்்.

வாழ்வாங்கு வாழ்ந்து வான்புகழ்பெற்ற களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலாதன், தன்னைப் பாடிய புலவர்

8