பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டிருந்தமையால் மலைபோல் உயர்ந்து விளங்கிய அவன் மார்பு, புலவர்க்கு, இடைவழியில் கண்ட இருதிசை மேகங்களையும் தடுத்துப் பயன்கொண்டு வீழ்ந்துகிடக்கும் மலைக்காட்சியை நினைவூட்டிற்ருக, அம்மார்பால் மாண்புற்ற மன்னனை மனம்ஆர வாழ்த்தி நின்றார்,

மன்னன் மார்புநலம் கண்டு மகிழ்ந்த புலவர், பின்னர் அவன்தோளைக் கண்ணுற்றர். உரம் பெற்றுப் பருத்து, மூழவுபோலும் உருப்பெற்ற அத்தோள்கள் இரண்டும், கோட்டை வாயிற்கதவுகளை அடைத்து, அகத்தே இடும் கணைய மரம் போல், அதிலும், வானவர்பால் கொண்ட அச்ச மிகுதியால், அ வ ரால் அழிக்கலாகா அமைப்புடையதும், தாம் செல்லும் இடந்தோறும் உடன் வந்து அரண்அளிக்கும் இயல்புடையதுமாக, அவுணர்கள் ஆக்கி வைத்திருந்த. பறக்கும் கோட்டை வாயிற்கதவிற்கு இட்ட கணைய மரம்போல் காட்சி அளிக்கக்கண்டு, களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரலின் நல்லுடல் நிலை அறிந்து அகம் மிக மகிழ்ந்தார்,

பரந்து அகன்ற மலைநிகர் மார்பும், பருத்து உயர்ந்த பெரிய தோள்களும் போலும் நல்லுடல் வாய்க்கப்பெற்ற அந்நல்லோன், அத்தோளாற்றல் தந்த துணையால் பெற்ற பெருநிதிக் குவியல்கள், அவனைப்பாடிவருவார் அனைவர்க்கும் வாரி வாரி வழங்கியும் வற்ருது வரைவின்றிப் பெருகியிருக்கக் கண்ட காப்பியனர், இந்நார்முடிச்சேரல், பொருள் வழங்கிப் பெறலாகும் பெரும்புகழ் படைத்தும், வகை வகையான வளம்பல பெற்றும் வாழ்ந்த வண்டன் என்ற வள்ளல் அனேயன், வழங்கும் புகழாலும், வற்ருவளத்தாலும் என விழுமிய உவமை கண்டு வியந்து பாராட்டினர்.

களங்காய்க் கண்ணியான், இவ்வாறு கொற்றம் மிக்க கோமகளுய், குடிபுரக்கும் கோல் உடையணுய், நல்லுடல்

14

  • *.