பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூறிப் பாராட்ட நினைத்த புலவர், அதை வெளிப்படக்கூருது, ஒருபால் கடலையும், ஒருபால்மலையையும் எ ல் லை ய க க் கொண்ட சேரநாட்டு மக்களெல்லாம், சேரநாட்டுத்தலைநகராம் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டிருக்கும் திருமாலின் திருவருளால் அல்லது, மருந்தாலும், மந்திரத்தாலும், வேறு தம் முயற்சிகளாலும், தமக்குற்ற இடர்நிலையைத் தீர்த்துக் கொள்வது இயலாது என்பதறிந்து, சேரர்தலை நகர்க்கண் வந்து குழுமி, அப்பெருமான வழிபட்டு, அவன் அருள் கிடைத்த மனநிறைவோடு தம் வாழிடம் செல்லும் சிறப்பைக் கூறிய முகத்தான்் விளக்கும் சிறப்பு பாராட்டிற்குரியது.

திங்களின் இருகோடுகளும் கூடிய நிலையை முழுமதி என்றும், இருகோடுகளும் பிரிந்து காட்சி அளிக்கும் நிலையைப் பிறைமதி என்றும் வழங்கும், 'கோடு கூடு மதியம்’ (புறம் : 67 : 4; பதிற்றுப்பத்து : 31 : 1.2) இரு கோட்டு ஒருமதி' (நக்கீரர் : திருவெழுகூற்றறிக்கை) தொடர்களைக் காண்க.

தோற்ருேடும் பகைவர் முதுகில், படைக்கலம் பாய்ச்சுவதையும், போரில் புறத்தே புண் பெறுவதையும் பழிமிகுசொயலாகக் கொள்வர் சிறந்த வீரர்.

'நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே' என்பதற்கேற்ப, தம் குடி மக்களின் குறைபோக்கி, அவர்களை நல்லவர் ஆக்கிய, அரசர்கடனைக், குறைவற நிறைவேற்றியவன் என்பது உணர்த்த, "ஆண் கடன் நிறுத்த' எனக் கூறியுள்ளார்.