பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவ்வாறு, அரசவைக்கண் அமர்ந்து, ஆர இருந்து, அவன் அரும்பெரும் புண்புகளையெல்லாம் நிரலே நினைந்து நினைந்து எத்தனை என எண்ணிப் பார்க்கத் தலைப்பட்டார் புலவர். ஆனால் புலவர்க்கு அது இயலாது போயிற்று, எண்ண எண்ண அவன் பெருமைகள் எண்ணுள் அடங்காது வளர்ந்து பெருகுவதல்லது எண்ணின் வரையறைக்குள் அடங்கிற்றிலது. நிரலே எண்ணிக்காணல் இயலாது. அதற்கு எண் கிடைக்காது என உணர்ந்த புலவர், ஒரு பேரெண்வரை ஒரு மு ைற எண்ணியதும், ஒருமுறை எண்ணியது முடிந்தது எள்பதை உணர்த்த ஒரு கழற்சிக்காயை இடுவது என்ற எண்ணுமுறையைப் பின்பற்றி எண்ணத் தொடங்கினர்; அப்போதும் பயன் கிட்டாதாயிற்று. எண்னு முறைகான இட்ட கழற்சிக்காய்கனை எண்ணிக் காண்பதே இயலாதாயிற்று. ஆகவே, களங்காய்க்கண்ணியானின் பெருமைகளை எண்ணிக் காண்பது இயலாது, என்பதை அறிந்து, அப்பயனில் முயற்சியை அறவே கைவிட்டு, நார்முடிச்சேரலின் ப ண் பு ம் பெருமையும் எத்துனைப் பெரியன எத்துணைப் பாராட்டிற்குரியன என நினைந்து நினைந்து நெஞ்நிறை மகிழ்வெய்துவதும், மாளா வியப்புறுவதுமாக வாழ்ந்திருந்தார் புலவர்.

அந்நிலையில், அவன்பால் அமைந்துகிடந்த மற்றொரு மாண்பினையும் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு புலவர்க்கு உண்டாயிற்று; அதுஉண்டாக, அம்மாண்புணர்ந்தபோது புலவரின் வியப்பும் ஓர் எவ்லைக்குள் நில்லாது விரிந்து பெருகுவதாயிற்று. தகடூர் ஆண்ட அதியமான்நெடுமான் அஞ்சியின் வழியில் வந்த நெடுமிடல் அஞ்சி என்பான் ஒருவன், அக் காலத்து வீரர் அனைவரினும் சிறந்து விளங்கினன். தஞ்சை நாட்டு நீடுர்க்குரியோளுகிய வேளிர்குலத் தலைவனம் எவ்வி என்பாளுேடு பகைகொண்டு, அவனை எதிர்த்த பசும்பூண்

25