பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திசையெலாம் சென்று சிறக்கும். சால்பும் செம்மையும் = சான்ருண்மையும், நடுவுநிலை நல்லாட்சிச் சிறப்பும் முத்துடை மருப்பின் மழகளிறு பிளிற = முத்துப்படுமளவு முதிர்ந்த கோடுடையவாகிய இளங்களிறுகள் போர் வெறிப்பெற்றுப் பிளிறுமாறு. மிக்கு எழு கடுந்தார் = போர் வேட்கை மிகுந்து எழுகின்ற கடிய துளசிப்படையாளர். துய்த்தலைச் சென்று = பகைநாட்டின் எல்லைவரையும் சென்று. துப்புத் துவர்போக = தம் வலிமையெலாம் காட்டிப் போரிட்டு. பெருங்கிளை உவப்ப = பாணர் மு. த ல ம் இரவலர் கூட்டத்தின் பெரிய சுற்றம் மனம் நிறை மகிழ்வெய்துமாறு. ஈத்து ஆன்று ஆளு இடனுடை வனனும் = நிறையக்கொடுத்து எஞ்சியதும் நிறைந்து, இடம் காணுதபடி, குவிந்து கிடக்கும், போரில் பெற்ற பொருள்களாம் பெருவளமும் . துளங்கு குடி திருத்திய = தளர்ந்த குடியில் உள்ளாரின் தளர்ச்சி போக்கி வாழ்வித்த வலம்படு வென்றியும் = விழுமிய வெற்றிச் சிறப்பும் ஆகிய எல்லாம் எண்ணின் = எல்லாப் பெருமைகளையும் எண்ணிப் பார்க்கின். இடுகழங்கு தபுந = எண்ணுமுறைக்கண் இடும் கழங்கும் கணக்கில் அடங்காது பெருகுதற்குக் க | ர ண ம | ன பெரும்புகழ் பெற்ருேனே! அடுபோர்க் கொற்றவ = கொல்லும் போர்க்களத்தில், என்றும் கொற்றமே .ெ று ம் பெரியோனே! கொன் ஒன்று மருண்டெனென் = உன் பண்புகளில் சிறந்து விளங்கும் ஒரு பண்பைக் கண்டு, மனம் மருண்டுபோயினேன். நெடுமிடல் சாய = நெடுமிடல் அஞ்சி என்பான் அழியவும், கொடுமிடல் துமிய = அவ்வஞ்சியின் கொடியவலி கெட்டொழி. யவும், பெருமலையானயொடு=பெரிய மலைபோலும் பரிய களிறுகளைக்கொண்ட நாற்படையோடு, புலம் கெட இறு த்து = அவ்வஞ்சியின் நாட்டகத்து நஞ்செய்கள் நலம் இழந்து போகும் வண்ணம் அந்நாட்டில் பாடிஅமைத்து இருந்து, தடந்தாள் நாரை படிந்து இரை கவரும் = பெரிய

29