பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீண்டகால்களைக்கொண்ட நாரைக் கூட்டம், நீருள் படிந்து இரைதேடி உண்ணுதற்கு இடமான முடந்தை நெல்லின் கழை அமல் கழனி = முற்றி வளைந்த கதிர்களை உடைய. வாகிய நெற்பயிரின், மூங்கில் போலும் தாள்கள் நிறைந்த கழனிகளைக் கொண்ட பிழையா விளையுள்நாடு = தப்பாத விளைபயனை உடைய அவன் நாட்டை. அகப்படுத்து = கைக்கொண்டும். ைவ ய மாலையர் = ஒரு பொருளாக வைத்து ம் திக்கத்தகாதவரும். வசையுநர் = எக்காலத்தும் வசைமொழியே வழங்குவோருமாகிய, கறுத்த பகைவர் தேளத்து ஆயினும் = உன்ைேடு பகைகொண்ட பகைவர் நாட்டகத்தே போர் மேற்கொண்டு இருக்கின்ருயாகவும். சினவாய் ஆகுதல் = சிறிதும் சினவாதிருத்தல், பெரிது இறும்பூது = பெரிதும் வியத்தற்குரிய விழுச்செயலாம்.

நீடுர் கிழவனை எவ்வி என்பானது ஏவல்கேளாது, அவனை எதிர்த்த பசும்பூண் பொருந்தலர் என்பாரை, நெடுமிடல் அஞ்சி, அரிமாணவாயில் உறத்துாரின்கண் வென்ற வரலாறு, பாணர் பாடிய அகநானூற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுளது.

'நீடூர் கிழவோன் வாய்வாள் எவ்வி ஏவல் மேவார் நெடுமிடல் சாய்த்த பசும்பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர்.”

- -அகம்: 266

30