பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியாற்றுக் காப்பியனர் பாடிய, அக்களவழிப்பாவில், ஒண்பெறிக் கழற்கால் என்ற தொடர், களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலால் அழிவுண்ட நாற்படையில் பணிபுரிவார் ஒவ்வொருவரும், களம்பல புகுந்து ஆங்குப்பெற்ற வெற்றிப் புகழ் அனைத்தையும் விளங்க உணர்த்தும், உரைபொதிந்த வீரக்கழல் கட்டிய காலினராவர் என்று உணர்த்தி, அவன் பகைவரின் பேராண்மையையே பாராட்டுவதன்மூலம், அவன் புகழ்பாராட்டும் பாநலம் அமைத்துள்ளமை கண்டு வியந்த வாலறிவுடையார். அப்பாட்டிற்கு அத் தொட ைரயே பெயராகச் சூட்டிப் பெருமை செய்தார்கள்.

24. ஒருஉப நின்னை; ஒருபெரு வேந்தே !

ஒடாப் பூட்கை, ஒண்பொறிக் கழற்கால், இருநிலம் தேயுல் விரிநூல் அறுவையர்; செவ்வுளைய மாஊர்ந்தும்,

5 நெடுங்கொடிய தேர் மிசையும்,

ஒடை விளங்கும் உருகெழு புகழ்நுதல் பொன் அணியான முரண்சேர் எருத்தினும் மள்ளிலத்து அமைந்த........... . மாரு மைந்தர் மாறுநிலை தேய,

10 முரசுடைப் பெருஞ்சமம் ததைய, ஆர்ப்பெழ

அரைசுபடக் கடக்கும் ஆற்றல்

புரைசால் மைந்த ! நீ ஒம்பன் மாறே’,

துறை: தும்பை அரவம் வண்ணம்: ஒழுகுவண்ணம் துரக்கு: செந்துக்கும், வஞ்சித்துக்கும் பெயர்: ஒண்பொறிக் கழற்கால்

- வேந்தே! ()மைந்த (12) மைந்தர் மாறுநில தேய (9) மாஊர்ந்தும் தேர்மிசையும், எருத்தினும், நிலத்தும் (4-8)

41.