பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்து நீ ஓம்பல்மாறு (12) அறுவையர் (2-3) நின்ன ஒரு உப (1)என வினைமுடிவு செய்க.

உரை : ஒருபெருவேந்தே ஒப்பற்ற பெரிய வேந்தனே, அரைசுபடக் கடக்கும் ஆற்றல் = பகையரசர் அனைவரும் அறவே அழிந்துபோகுமாறு அவர்களேவெற்றி கொள்ளும் ஆற்றல் வாய்ந்த புரைசால் மைந்த உயர்ந்த பண்பு. களின் நிலைகளமான ஆற்றல் மறவனே! மாரு மைந்தர் மாறுநிலைதேய = போர் முறையில் வ ழு வா த வீரர்களின் மாறுபாட்டிற்குக் காரணமாம், மிகுவலி கெடுதற் பொருட்டு. செவ்வுளைய மாஊர்ந்தும் = சிவந்த தலையாட்டம் பெற்ற குதிரைமீது அமர்ந்தும். நெடுங்கொடிய தேர்மிசையும் = நெடிய கொடிபறக்கும் தேர்மீது இருந்தும். ஒடை விளங்கும் = முகபடாம் கிடந்து அழகு செய்யும். உருகெழு புகர்துதல் = கண்டார்க்கு அச்சம் ஊட்டும் புள்ளிகள் பொருந்திய நெற்றியினை உடைய, பொன்னணி யானையின் =பொன்னரி மாலை அணிந்த யானையுடைய முரண்சேர் எருத்தினும் = வலிமை பொருந்திய கழுத்தின்கண் அமர்ந்தும், மன்நிலத்து = நிலைபெற்ற நிலத்தில் நின்றும். முரைசுடைப் பெருஞ்சமம் = போர்முரசு முழங்கும் பெரிய போர்க்களத்தில். ததைய= பகைவர் படையோடு நெருங்கி நின்று போரிடும் நிலையில். ஆர்ப்பெழ = ஆரவாரப் பேரொலி எழ. நீ ஓம்பல்மாறு = போர்செய்து நின் நாற்படையைக் காத்து நிற்பதால். ஓடாப் பூட்கை = போரில் புறங்காட்டாப் பண்பும். ஒண்பொறிக்கழற்கால் = போர்ப்புகழ் பொறிக்கப் பெற்ற ஒள்ளிய பொன்லைான கழல்கட்டிய கால்களும். இருநிலம் தோயும் - விரிநூல் அறுவையர் = பெரிய நிலம்வரை நீண்டு தொங்கும் மெல்லி நூலால் ஆன ஆடையும் உடையவராகிய நின் பகைவரெலாம். நி ன் னை ஒருஉப = நின்னைக் கண்டு நடுங்குவர். . . . . . -

42