பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்தினர் களத்தை வாழ்த்திய அவர் வாய், அண்மையில் நிற்கும் காவலனை வாழ்த்திற்று; அக்காவலன், அக்கொடும் போர் புரிந்து பெருவெற்றிபெறத் துணைபுரியும், அவன் மறத்தை வாழ்த்திற்று, வாழ்த்தெல்லால் ஒரு பாட்டாக வடிவெடுத்தன.

காப்பியாற்றுக் காப்பியனர் போலும் புலவர்களை, வாழ்விப்பது களங்காய்க்கண்ணியானின் பெருவளம்; அப்பெருவளத்தை அளிப்பது அவன் பெருவலி, அப்பெருவலிக்கு உறுதுணைபுரிவது அவன் கைவாள்; ஆகவே, அவ்வாட்போர் நிகழும் போர் முனையிலேயே புலவர்களின் பெருவாழ்வு நிற்பதாயிற்று: ஆகவே, அம்முனேயிடத்தைப் பாராட்டும் "வாள்மயங்கு கடுந்தார்’ என்ற தொடரையே, அவ்வாழ்த்துப் பாவிற்குப் பெயராக வைத்து வழங்கினர் . புலவர்.

26. வீயா யாணர் நின் வயிஞனே தாவாதாகும் மலிபெறு வயவே; மல்லல் உள்ளமொடு, வம்பு அமர்க் கடந்து செருமிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று. 5 பனைதடி புனத்தின் கைதடிபு பலவுடன்

யானைபட்ட வாள்மயங்கு கடுந்தார், மாவும் மாக்களும் படுபிணம் உணி இயர் பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன்புற எருவைப் பெடைபுணர் சேவல் 10 குடுமி எழாலொடு கொண்டு, கிழக்கு இழிய

நிலம் இழி நிவப்பின் நீண்நிரை பலசுமந்து உருவெழு, கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக் குருதிச் செம்புனல் ஒழுகச் செருப்பல செய்குவை; வாழ்க நின் வளனே !

52