பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறை: களவழி வண்ணம்: ஒழுகு வண்ணம் தூக்கு: செந்தூக்கு பெயர்: வாள்மயங்கு கடுந்தார்

உள்ளமொடு அமர்கடந்து, மறவரொடு சென்று, யானை பட்ட கடுந்தாரில், பிணம் உணி இயர் வந்த சேவலை எழாலொடு கொண்டு, நிவப்பின் நிரை சுமந்து, கூளியர்ஆட, குருதிப்புனல் ஒழுக, செருப்பல செய்குவை, நின்வயின் வயவு, தாவாதாகும்; நின்வளன் வாழ்க எனக்கொண்டு கூட்டுக.

உரை: மல்லல் உள்ளமொடு = வெற்றியால் விளையும் மகிழ்ச்சி நிறைந்த மனம் உடைமையால், வம்பு அமர் கடந்து = பகைவர் செய்யும் புதுப்புது போர் முறைகளையெல்லாம் வென்று. செருமிகு முன்பின் போரில் சிறந்த மறத்தினை உடையராகிய, மறவரொடு தலைச்சென்று வீரர்களோடு போர்க்களம் புகுந்து, பனைதடிபுனத்தின் = பனைமரங் களை வெட்டி வீழ்த்திய தோட்டத்தைப் போல. கைதடிபு யானே பலவுடன் பட்ட க கைகள் வெட்டுண்டு யானைகள் கூட்டமாய் இறந்து கிடக்கும். வாள் மயங்கு கடுந்தார் = இருதிறத்து வீரர்களும் கலந்து நின்று போருடற்றும் தூசிப் படை நிற்கும் களத்தின்கண். மாவும் மாக்களும் படுபிணம் = குதிரைகளும் யானைகளும் வீரர்களும் இறப்பதால் குவிந்து கிடக்கும் பிணங்களே. உணி இயர் = உண்ணும் பொருட்டு வந்திருக்கும். பொறித்த போலும் புள்ளி எடுத்தின் = பொறித்து வைத்தனபோலும் புள்ளிகளைக் கொண்ட கழுத்தினேயும். புன்புறம் = புல்லிய புறத்தினையும் உடைய. பெடைபுணர் எருவைச் சேவல் - பெடையோடு கூடிவாழும் சேவற் பருந்துகளே. குடுமி எழாலொடு கொண்டையுடையவாகிய கழுகுகளோடு, கொண்டு அடித்துக் கொண்டு,

53