பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிதரு வெற்றியாம் எனக்கூறிய சிறப்பால், அப்பொருள் அளிக்கும் வலம்படு வென்றி என்ற தொடரே, அப். பாட்டிற்குப் பொருந்தும் பெயராய் அமைந்துளது.

27. 'வாழ்க நின்வளனே! நின்னுடை வாழ்க்கை !

10

வாய்மொழிவாயர் நின் புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி, நகைவர் ஆர நன்கலம் சிதறி ஒன்று அவிந்து அடங்கிய செயிர்தீர் செம்மால்! வான்தோய் நல்லிசை உலகமொடு உயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாஇரும் புடையல் மாக்கழல் புனைந்து மன்எயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொன்நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக் கோடற வைத்த கோடாக் கொள்கையும் நன்று பெரிது உடையையால் நீயே வெந்திறல் வேந்தே! நீ இவ்வுலகத் தோர்க்கே’’

துறை: செந்துறைப் பாடாண்பாட்டு வண்ணம்: ஒழுகு வண்ணம் நூக்கு: செந்துாக்கு பெயர்: வலப்படுவென்றி

செம்மால் (5) வென்றியும் கொள்கையும் உடையை:

ஆகவே உலகத்தோர்க்கு, நின் வளனும் வாழ்க்கையும் வாழ்க

என முடிக்க,

உரை :- வாய்மொழி வாயர் = என்றும் வாய்மையே

வழங்கும் நாவினராகிய நல்லோர். நின் புகழ் எத்த = உன் புகழைப் பாராட்டிப் பரவுமாறு. ஆரப் பழங்கண் அருளி

60