பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

= பகைவர்க்கு நிரம்பவும் துன்பத்தை அளித்து. நகைவர் ஆர நன்கலம் சிதறி = பாணர் மு த லா ம் இரவலர்க்கு நிரம்பவும் நல்லபல அணிகலன்களை வரையறையன்றி வழங்கி. ஆன்று அவிந்து அடங்கிய = கல்வி கேள்விகளால் நிறைந்து, பணியத்தகும் பெரியோர்களைப் பணிந்து, புலன் அடக்கமும் பெற்ற செயிர்தீர் செம்மால் = குற்றத்தின் நீங்கி விளங்கும் மக்களிற் சிறந்த மாண்புடையோய் ! வான்தோய் நல்லிசை = இதனுல் தோன்றி வானளாவப் பரந்து விளங்கும் உன் புகழ். உலகமொடு உயிர்ப்ப = உலகம் உள்ளளவும் நின்றுவாழ. துளங்கு குடி திருந்தியதளர்ந்த குடியினரைத் தளர்ச்சி போக்கி வாழ்வித்த வலம்படு வென்றியும் வெற்றிக்கு வழிகாணும் வெற்றியும். மாஇரும் புடையல் = கரிய பெரிய பனந்தோட்டுமாலையும். மாக்கழல் = சிறந்த வீரக்கழலும், புனைந்து = அணிந்து சென்று. மன்னயில் = பகை மன்னர்களின் அழிக்கலாகா அரண்களை, எறிந்து = அழித்து. மறவர்த் தரீஇ = அவ்வரண்களைக் காத்திருந்த மறவர்களைக் கொண்டு வந்து தொன்னிலை சிறப்பின் = பழமையான நிலைபெற்ற பெருமையோடு. நின் நிழல் வாழநர்க்கு=உன் ஆட்சியின் கீழ்வாழும் குடிமக்களுக்கு நல்வாழ்வு அளிப்பான் வேண்டி. கோடுஅற = அம்மறவர் உன் நாட்டவர்பால் கொண்டிருக்கும் வெறுப்பும் வஞ்சமும் போலும் கொடுமைக்குணங்கள் அறவே இல்லையாகும்படி. வைத்த = அம்மறவர்களை நல்வாழ்வில் வாழவைத்த. கோடாக் கொள்கையும் = கோல் கோடாமைக்குக் காரணமான கொள்கையும். நீ நன்று பெரிது உடைய = நீ மிகப் மிக பெற்றுள்ளன. ஆ க வே, இவ்வுலகத்தோர்க்கு = இவ்வுலகர்த்தவர்க்காக; நின்வளன் வாழ்க - உன்னுடைய வாழ்க்கையும் வாழ்வதாக,

51