பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நாடுகாண் அவிர் சுடர்

களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலாதன் அரசவைக்கண் பலநாள் வீற்றிருந்து, அவன் பெருமைகளைப் புகழ்ந்துபாடி, அவன் அளித்த பரிசிற்பொருள்களோடு, அவன் தலைநகர் விடுத்துத் தம்நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார் புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை. தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஓயாப் போர் மேற்கொண்டே கழித்துவிட்ட களங்காய்க் கண்ணியான், சில நாட்களாவது போர்த்தொழில் ஒழிந்து, பேரின்பம் நுகர் வான் விரும்பி, அதற்கேற்றஇடம், கவின்மிகு காட்சிகளால் நிறைந்து, அமைதி நிலவும் நேரிமலேயே எனத் தேர்ந்து, ஆங்குச் சென்று, அம்மலைக்காட்சி களில் மனம் மகிழ்ந்திருக்கத் துணிந்தான்். அவனோடு சென்று, அம்மலைவளம் காண்பதில் புலவர்க்கும் விருப்பம் உண்டு என்ருலும், சேர நாட்டிற்கு வந்து நாட்கள்.பல ஆகி. விட்டமையால், தம் வீடடையும் வேட்கை மிகவே, அவளுேடு செல்லாது அவன்பால் விடைகொண்டு புறப்பட்டு விட்டார்.

தம் மனநோக்கிப் புறப்பட்டு வந்து கொண்டிருந்த புலவர், சேரநாட்டின் எல்லைக்கண், பாணர் குடியில் பிறந்து, பேரியாழ் சீறியாழ் இசைகளுக்கு ஏற்பக், குரல் எடுத்துப் பாடவும் ஆடவும் வல்ல விறலியொருத்தியைக் கண்டார். விறலி வறுமைத் துயரால் மிகமிக வருந்தியவள்போல் காட்சி அளித்தாள். அவளின் மங்கல மாண்புணர்த்தும் அறிகுறி யாய், அவள் கையிற் கிடந்து ஒலிக்க வேண்டிய ஒரு சில வளைகள் அல்லது வேறு அணி எதுவும், அவள் மேனியில் கிடந்து ஒளி வீசாமையொன்றே, அவள் வறுமையின் கொடுமையைப் புலப்படுத்துவாயிருந்தது. களங்காய்க்கண்ணி

74