பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யானைக் காணுமுன்னர் வறுமையிற்கிடந்து உழன்று, அதன் கொடுமை இத்தகைத்து என்பதை உணர்ந்திருந்தமையால், புலவர், விறலியின் வறுமைக்குப் பெரிதும் வருந்தினர். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பேருள்ளம் வாய்க்கப் பெற்றவராதலின், தனக்குப் பொன்னும் பொருளும் கொடுத்துப் பெருவாழ்வு அளித்த களங்காய்க்கண்ணி நார். முடிச்சேரல்பால், விறலியையும் போக்கி அவள் வாழ்விலும் வளம் காண விரும்பினர் புலவர். -

அவ்வாறு விரும்பிய புலவர், விறலி சேர நாட்டகத்தே நேரி என்ற பெயருடையதொரு மலையுளது, அம்மலைவளம் காணும் வேட்கை மிகுந்த இந்நாட்டு வேந்தம்ை, நார்முடிச்சேரலாதன், தன்னைப்பாடிப் பரிசில்பெற வந்து குழுமியிருக்கும் இரவலர் கூட்டத்தோடு, அம்மலைச்சாரலில் தங்கியுள்ளான் ஆங்கு, உண்டார் உள்ளத்தில் இன்பத்தை மிகுவிப்பதல்லது, அவர் மதியைத் திரித்து, மாண்பிழக்கப் பண்ணுத வகையில், களிப்பு மிகுவிக்கும்பொருள்களைப் பெருகக் கலவாது, அளவே கலந்து நார்கொண்டு அ ரி த் து த் தெளித்த மதுவை, இரவலர்க்கு வேட்கை தீருமளவு தந்தும், பழச்சாற்றில் நறுமணமலர்கள் இட்டு, நறுமணம்ஊட்டிய நறவினைத், தான்் பருகியும் மகிழ்ந்து கிடக்கும் அம்மன்னவன்பால் இப்போதே செல்வாயாக! சென்றால், கைவளை அல்லது வேறு அணிகாணு உன்மேனியின் ஒவ்வோர் உறுப்பிலும், உரிய அணிகளை அணிவித்து அழகு செய்வன். அந்நிலையில், பச்சிளம் இலை. களுக்கு இடையிடையே பொன்னிற மலர்களால் நிறைந்து பொலிவுபெற்று நிற்கும் வேங்கை மலர்போலும் வனப்புடிையளாகி விளங்கித் தோன்றுவை. நார்முடிச்சேரல், உன்னை மட்டுமே அவ்வாறு நலம் செய்வன் என்று எண்ணற்க1 உன்னைத் .ெ த டர் ந் து உன்பின் திரியும் மகளிர் அனைவரையுமே அம்மாண்புமிகு நிலையில் நிறுத்துவன்;

75