பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோட்டி நீவாது தொடிசேர்பு நின்று பாகர் ஏவலின் நுண்பொறி பிசிரக் காடுதலைக் கொண்ட நாடுகாண் அவிர் சுடர் 30 அழல் விடுபு மரீஇய மைந்தின்

தொழில் புகல்யானை நல்குவன் பலவே'.

துறை : விறலியாற்றுப் படை வண்ணம் : ஒழுகு வண்ணம் தூக்கு: செந்துாக்கு பெயர்: நாடுகாண் அவிர் சுடர்

'ஆடவர் போர் முக த்து இறுப்ப, தான்ே இறை கொண்டன்று: பெரும! ஊர்முகத்து இருஅலியர்; களைநர் யார்இணி' என மறவர் அடங்க, ஒன்னர்தேய, வேந்துடை அருஞ்சமம் கொன்று, மன்பதை நிரப்பி, வென்றியாடிய மீகையினையும், அகலத்தினையும், தடிந்த மைந்தினையும் உடைய சேரல்! உன்னம் சாய, கள் இரவலர் தடுப்ப, நறவு மகிழ்ந்து நேரியோனே; மகளிர் நலம் சிறப்ப, பாணர் பூமலேய இளையர் வாழ்த்த, யானை நல்குவன்; விறலி செல்லாயோ! எனக் கொண்டு கூட்டிப் பொருள் கொள்க.

உரை:- புண்தோள் ஆடவர் = போர்ப்புண் பெற்ற தோளினராகிய வீரர்கள். இன்னிசை இமிழ் முரசு இயம்ப= இனிய இசையெழுப்பும் போர் முரசு ஒலிக்குமாறு. கடிப்பு இகூஉ = குணில் ஒச்சிப் புடைத்துக் கொண்டே போர் முகத்து இறுப்ப = போர்க்களத்தே வந்து தங்க. தான்ே= களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலின் நாற்படை. காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் = காய்த்த கரந்தையின் கரியகொடி படர்ந்திருக்கும் விளைவயலில். இறைகொண். டன்று = வந்து தங்கிவிட்டது. பெரும = பேரரசர்களே!

-6- 81