பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெண் கள் = தெளிந்த கள்ளில், வறிது கூட்டு அரியல் = கலத்தற்குரிய பொருள்களைக் களிப்புமிக்கு விடாதபடி, அளவே கலந்து ஆக்கிய வடித்தெடுத்த கள். இரவலர்த்தடுப்ப - தன்னை உண்டு மகிழும் இரவலரை வேறுஇடம் செல்ல விடாது தடுத்து நிறுத்த. தான்் = நார்முடிச்சேரலாதன். தர உண்ட நனே நறவு மகிழ்ந்து = ஏவல் இளையர் தர, உண்ட பழச்சாறும், மலர்மணமும் கலந்து ஆக்கிய நறவால் களிப்பு மிக்கு. நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே = நீர் வீழ்ச்சிகள் ஓவென ஒ லி க் கு ம் நேரிமலைச்சாரலின் கண் உள்ளான். சில்வளை விறலி = ஒரு சிலை வளையல்களே அணிந்து வறுமைநிலை தோன்ற வந்து நிற்கும் விறலி! மெல்லியல் மகளிர்=உன் உடன்வந்திருக்கும் மென்மையான இயல்பினராம் இளம் மகளிர். வயங்கு இழை அணிந்து = விளங்கும் அணிகள் பலபூண்டு. மலர்ந்த வேங்கையின் -

மலர்களால் நிறைந்திருக்கும் வேங்கை மரம்போல், எழில் நலம் சிறப்ப = பேரழகுடையராகிப் பெருமையுறவும். பாணர் பைம்பூ, மலேய = பாணர் பொற்ருமரைப் பூச்சூடவும். இளையர்=இளையோர். இன்களிவழா மென்சொல் அமர்ந்து = கள்ளுண்டலால் ெப ற் ற இனிமைப் பண்பு கெடாத மெல்லிய நல்ல சொற்களையே வி ரு ம் பி. நெஞ்சுமலி உவகையர் = மனம் நிறைந்த மகிழ்ச்சி உடையராகி, வியன் களம் வாழ்த்த =போர்க்களத்தே அவன் பெற்ற வெற்றிகளை எடுத்துக் கூறி வ ழ் த் த. தோட்டி நீவாது = பாகர், தோட்டியால் உணர்த்தும் குறிப்புத் தவருமல், தொடி சேர்பு நின்று = கோட்டில் தொடியாகிய பொற்பூண் பொருந்த நின்றே, பாகர் ஏவலின் = பாகர் ஏவுதலால், ஒண்பொறி பிசிர = ஒள்ளிய செந்நெருப்புப் பொறிகள் சிதறிப் பறக்க, காடு தலைக்கொண்ட = காட்டிடத்தே பற்றிக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் வீசும் = நாட்டவர், தம் நாட்டகத்தே நின்றும் காணுமாறு ஒளிவிட்டுச் சுடர் வீசும் பெருந்தீப்

83