பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்ந்த குடியில் பிறந்து, யாது காரணத்தாலோ நிலை தளர்ந்துபோன தன் நாட்டவர்க்கு, வேண்டுவ வேண்டுவ எல்லாம் வழங்கி, அவரை நன்னிலைக்கண் நிறுத்துவதற்குக் காரணமாய் இ ரு க் கு ம், களங்காய்க்கண்ணியானின், வலுவோடு கூடிய விரிந்தகன்ற மார்பிற்கு, மழையில்லாமை யால் வறண்டுகிடந்த சேர நாட்டில் சில திங்கள் கிழக்கு நோக்கியும், சில திங்கள் மேற்கு நோக்கியும் செல்லும் மேகங்களைத் தடுத்துப் பெருமழை பெய்யச் செய்து, அந்நாட்டை வாழ வைத்து, வடக்கு தெற்காக நீண்டு கிடக்கும் மேற்கு ம லே த் .ெ த ர ட ைர உவமையாக்கி இருப்பது இரண்டாவது உவமை. - -

'துளங்கு குடி விழுத்துணை திருத்தி ஆண்கடன் இறுத்த நின்பூண்கிளர் வியன்மார்பு கருவிவானம் தண்டளி தலைஇய வடதெற்கு விறங்கி விலகுதலைத்து எழிலிய பணிவார் விண்டு விறல் வரை அற்றே’’

- -பதிற்றுப்பத்து: 31: 15-17

ஒரு நாட்டு அரணிலிருந்து வெளியேறிப் பகைநாட்டில் பாசறைகொள்ளும் படைக்கு, ஆங்கு அரண் கிடைப்பது அரிது. ஆனால், ஒரு படைக்குப் பாதுகாப்பு அளிப்பது அரண் அரண் இல்லாப்படை அ ழி ந் தே போய்விடும். ஆகவே, சென்ற நாட்டில் ஓர் அரண் அமைத்துக் கொள்வது இன்றியமையாதது. இப் போர்நெறி உணர்ந்தவன் களங்காய்க் கண்ணியான். அதனல், சென்றிருக்கும் பகை நாட்டு மண்ணில், பெருமதில். அம்மதிலைச் சூழ, ஆழ்ந்த அகழி; அவ்வகழியைச் சூழக் காவற்காடு; அக்காட்டைக் காக்கும் முள்வேலி ஆகிய அமைப்புகளைக் கொண்ட, வலுவான அரண் ஒன்றை அமைத்துக் கொண்டான் அவன்,

36