பக்கம்:பதிற்றுப்பத்து-கமழ் குரல் துழாய்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களங்காய்க் கண்ணியாளுெடு களம்புகும் வழக்கம் உடையவராகிய புலவர் காப்பியாற்றுக் காப்பியர்ை, ஆங்கு அவன் அமைத்திருக்கும் அரண் கண்டு வியந்து போளுர்; ஆங்கு, அவன், தன் வாட்படைகளையே மதிலாகவும், கூரிய மு ன க ளை யு ைட ய விற்படைகளையே அகழியாகவும், வேற்படைகளையே காவல்காடாகவும், அவ்வில்லின்றும் விரைந்து பாயும், அம்புகளையே, அக்காவற்காட்டை வளைத்துக் காத்து நிற்கும் முள்வேலியாகவும் கொண்டு நல்ல தோர் அரண் அமைத்திருந்தான்். புலவர், தம் கற்பனைத் திறத்தால், ஓர் அரிய அரண் அமைத்திருக்கும் அருமை, பெருமைப்படக் கூடியதல்லவோ? இது, மூன்ருவது உவமை.

'வரம்பில் வெள்ளம் வாள்மதிலாக, வேல்மிளை உயர்த்து வில்விசை உமிழ்ந்த வைம்முள் அம்பின் செவ்வாய் எஃகம் வளைஇய அகழி.”

-பதிற்றுப் பத்து : 33 : 6.9

பொன் த க ட் டா ல் ஆக்கப் பெற்ற ஒரு கூட்டின் மேற்புறம், நார்கொண்டு பின்னப்பட்டு, அந்நாரின் தோற்றம் புறத்தே தோன்ருவாறு, நூலால் கோக்கப்பெற்ற முத்துச்சரங்கள் கிடந்து அணிசெய்ய, அக்கூட்டின் விளிப்பிலே ம ணி க ள் நாலவிடப்பட்டிருந்தது, களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் அணிந்திருந்தமுடி, அம்முடியில் மேல்புறத்தை மூடியிருக்கும், நார்கொண்டு பண்ணப்பட்ட பின்னலுக்கு, வேலமரத்து உச்சிக்கிளையில், சிலந்தி தன்வாயில் ஊறும் எச்சில் நீரால் பின்னிவிட்டிருக்கும் வலையை உவமையாக்கி இருக்கும் நயமும், வேலமரத்து உச்சியில் தன்வாய் எச்சில் நீரால் பின்னிவிடப்பட்டிருக்கும் சிலந்தி வலைக்கு, புருக்களின் கால்களைச்சிக்க வைத்து அப்புருக்களைக் கவரும் வேடன்

87