பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தாயாக ஆகப்போறேன்னு நிலத்திலே கால் பாவாமல் ஆடிச் சிரிச்சேனே, அது இப்ப அப்படியே அவலமாயிருச்சுதே அத்தான் ? நான் மகாபாவி !....கொடுத்துவைக்காத கட்டை நான்!...” என்று சித்தம் பேதலித்தவள் மாதிரி எங்கோ சூன் யத்தை வெறித்து நோக்கியபடி சொன்னாள்.


அதற்குமேல் அவள் உதடுகள் அசையவில்லை. அதற்கு உண்டான வலு இல்லை அவளுக்கு. மேலும், செந்தில் நாயகம் வேறு சின்னப்பிள்ளை போன்று விம்மத் தொடங்கிவிட்டார். அவர் மைத்துனர் சமாதானப்படுத்தி முடிப்பதற்குள் போதும்போது மென்றாகி விட்டது.

"அழாதே மங்களம் ! உன்னைச் சொல்லிக் குற்றமில்லை. நான்தான் ரொம்பப் பாவி! ... இல்லைனா ,இத்தனை காலத் துக்கப்புறம் வந்த அதிர்ஷ்டம் இப்படி நம்மை ஆசைகாட்டி மோசம் செஞ்சிருக்குமா ? என்ன செய்யறது ? அவங்க அவங்க தலைவிதியை-கர்ம வினையை அவங்க அவங்க அனுபவிச்சுத்தானே தீரனும்!...வாரவிதி வழித் தங்காதின்னு சொல்லுவாங்க. வாஸ்தவம் தான்!... விதின்னு ஒண்ணு-ஏதோ ஒண்ணு இருக்கத்தான் வேணும். இல்லாட்டி, இப்படி நடந்திருக்கவே முடியாது!...என் நிழல் என்னே விட்டா போயிடும் ?....ஊஹஅம்!...”

மனைவிக்குத் தேறுதல் மொழிகள் சொன்னார் செந்தில் நாயகம். லேடி டாக்டரைப் பார்த்துப் பேசி, அமைதியின் துளிப்பகுதியை வலுக்கட்டாயமாக நெஞ்சிடை ஏற்றிக் கொண்டு, திரும்பினார். மைத்துனரும் உடன் வந்தார். கண்டோன்மென்ட் பகுதியில் ஓடிவந்த விபத்து ஒன்றை அந்தச் சாமூண்டீஸ்வரர்தாம் விலக்கி விட்டிருப்பார் போலிருக்கிறது!

அன்றைய இரவை 'பார்' ஒன்றில் கழித்தார் செந்தில் நாயகம் அவர்கள். துணை இருந்த புண்ணியம் மகேந்திர னுக்கே சொந்தம். அதற்கப்புறம் பல மணி நேரங்களே மதுவின் கழலடிப் போதையிலே கழித்த மெய்யும் 'மங்களம் அண்ட்கோ'வின் சொந்தக்காரருடையதே ஆகும்.