பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தொடங்குகிறது. சோதனையை நடத்த எத்தனம் செய்யும் மனிதனும் ஒரு சோதனையாக மாருமல் தப்பவும் முடிவதில்லை!...

இத்தகைய விந்தைகள் மண்டிய இவ்வாழ்க்கை யின் முடிவுதான் என்ன ? - இதுதான் இன்று வரை யாருக்கும் தெரியாத பரம ரகசியமாக இருந்துவிடுகிறது! -இல்லையென்ருல், பூரீமான் செந்தில் நாயகத்திற்கு மகிழ்ச்சியின் எல்லே தொட்ட ஒர் ஆரம்பமும், சஞ்சலத்தின் முனே எட்டிய ஒரு முடிவும் கிட்டியிருக்குமா ?வசீகரமும் குரூரமும் கைகோத்த புதிர்க்கோளத் தின் தலைவியாக இக்கதையின் தலைவி யாமினி திகழ்ந்திருப்பாளா ?...

செந்தில் நாயகம், யாமினி, மோகனசுந்தரம் ஆகிய மூன்றே மூன்று உறுப்பினர்கள் சுற்றி வளேக்கும் இக்கதை தமிழ்ச் சாதியின் கதைபிரச்சினேக்கு உரிய கதையுங் கூட!...

உங்கள் சிந்தனைக்குக் கூடுதலான வேலை தரக் காத்திருக்கும் இக்கதையின் தராதரம் பற்றிய தீர்ப்புக்குத்தான் நீங்கள் ரசிப்புப் பண்பின் நடுவர்களாக இருக்கின்றீர்களே!...

சென்ற ஆகஸ்டு என்னுடைய 'பூவையின் கதைகள்’ த மி ழ க அரசின் பரிசினைப் பெற்றது. அம்மகிழ்வின் ஆர்வத் தடத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் நூல்களுள் ஒன்று இது.

'உலகம்” விரும்பி .ெ வ வளி யி ட் ட இக் கதை, இப்போது நூல் வடிவம் பெற்றிருக்கிறது. புகழ்கொண்ட கிறுவனத்தின் வாயிலாக இந் நாவல் வெளிவருவது என் மகிழ்வைப் பெருக்கு கிறது. அவர்கட்கு என் நன்றி.

பூவை. எஸ். ஆறுமுகம் பூவை மாநகர் மார்ச், 1967