பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62


அமைதியாகத் துரங்கியிருந்தால் அதுவே மகத்தான பாக்ய மாயிற்றே! அவர்வரை அதுவே கூட தர்மத்தின் பிச்சை யாகவும் அமைந்திடலாமே! இப்போது அவர் உள்ளம் அந்த விசித்திரத்தை கினே வூட்டியது. ஊறிய திடம் இப்பொழுது காலூன்றியது. என் யாமினியை என் மங்களத்தின் அனுமதியுடன் மறுமணம் புரிந்துவிட்டால் சிலாக்கியமாகிவிடாதா?.... என் பாவத் துக்குப் பிராயச்சித்தம் கிட்டிவிடும். என் வினேயும் விதியும் அப்புறம் வேலே முடிந்து ஆண்டவனிடம் திரும்பிவிடும்!. ஆமாம்...இன்றே பங்களுருக்குப் பறந்துபோய் மங்களத்திடம் பாமினி விஷயமாக நேரில் பேசில்ை என்ன?....' என்று மனத் தின் ஒரு பகுதி அவசரப்பட்டுத் துடித்தது. அதே நேரத்தில், ‘யாமினி எங்கே இருக்கிருள்?... அவள் முடிவை வாங்கிக் கொண்டல்லவா மங்களத்தின் செவிகளில் இவ்விஷயமாகப் பேச்சைத் துவக்க வேண்டும்?' என்று எதிர்க்கேள்வி அமைந்தது. அப்போது அவரது அடிமனத்தின் நியாயபுத்தி அவரை முள்ளாய்க் குத்தியது. 'உன் சுயநலப் பண்பில்ை, நீ பண்பு கெட்டு, கெட்ட பெயரெடுத்தது போதாதா?.யாமினியின் நல்வாழ்வில் உனக்கு நிஜமான நல்ல எண்ணம் இருக்கும் பட்சத்தில் முதலில் அவளேக் கண்டுபிடி. அப்புறம் அவள் புருஷனைக் கண்டுபிடி, பிறகு, உன் உயிரைக் காணிக்கை வைத்தாவது அவர்கள் இருவரையும் மகிழ்ச்சியின் தம்பதி யாக்கு. அதுதான் உன் கடமை. அதுவே மனிதாபிமானம். அதுவே தர்மம்! ...' துள்ளி எழுந்தார் அவர். கண்களைத் துடைத்தார். மனச் சான்றின் கட்டளைக்குக் கட்டுப்படத் திட்டமிட்டார். தொழு கைக் கூடத்திற்கு விரைந்து, பூமியில் தலே பதித்து விழுந்து எழுந்தார். புதிய வைராக்யம் துளிர்த்தது. அப்போது, 'மங்களம் இருக்குதா? அதோடே கொஞ்சம் கான் பேசவேணும். கான் அதோட சிநேகிதன்,” என்று ஒரு குரல், போனில் பேசியது.