பக்கம்:பத்தினிப் பெண் வேண்டும்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77


ஆம்...அப்படித்தான் இருக்கவும் வேணும் ...நான் செய்த பாவத்துக்கும் பழிக்கும் கடவுள் இந்த ஆள் ரூபத்திலே இப்போது என்னே வஞ்சம் தீர்க்க முனேஞ்சிருக்க வேணும் !...என் மங்களம் தங்கமானவள் !...” நினைவுகள் சிலிர்த்தன. ஒரு தருணம், செந்தில் நாயகம் எங்கோ திருவிளே யாடல் புரிந்துவிட்டு வீடு திரும்பினர், விஷக்காய்ச்சலுடன், காரில் இறங்கிய மளுளனேக் கண்டதும், ஓலமிட்டுக் கதறினுள். 'தெய்வமே, என் புருஷன் உயிரை நீ எடுத் துக் கொள்ளுறதாக முடிவு செஞ்சிருந்தால், அதுக்குப் பதிலாக என் உயிரை நீ எடுத்துக்கொள் ! என் கணவரைக் கொடு !...” என்று கூக்குரலிட்டாள். மங்களத்தின் மனோபாவத்தின் திண்மையைக் கண்டு உற்றமும் சுற்றமும் அதிசயித்தது. விஷயம் அறிந்தபின், செந்தில்நாயகம் தம் மனேவியை ஆரத்தழுவி ஆனந்தக் கண்ணிர் சொரிந்தார். பகவான் நம் யாரையும் சோதிக் கலே ரெண்டுபேரையுமே கல்லபடியாய்க் காப்பாத்திட் டார் ' என்று மகிழ்ந்தார். மங்களம் கிடைத்திருக்காத பட்சத்தில் அவர் என்ருே கீழ்ப்பாக்கத்தில் யாமினிப் பைத்தியமாகவல்லவா இருந்திருப்பார், பாவம் !... அந்த மகிழ்ச்சியின் மாற்று தனித்தன்மை கொண்டது. சிரிப்பின் அலைகளுடன் தம் திருமணப் படத்தை கிமிர்ந்து கோக்கினர் செந்தில்நாயகம். மங்களம், உனக்கு நான் சரியான 'மாட்ச் இல்லேன்னுதான் என் அந்தராத்மா சொல்லுது !...நிஜ மும் அதுதான் !...-யாமினி தனக்குக் கிட்டாத தாபத்தின் உச்சத்தில் அலேந்த செந்தில் நாயகத்தை புனர் ஜன்மம் பெறச் செய்த புண்ணியவதி மங்களம் !... நிமிஷங்கள் ஓடின. கம்பெனியிலிருந்து குமாரி குயில்மொழி வந்தாள். முத லாளியின் அவசரக் கையெழுத்துக்காக வந்தாள்.