பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

அருளொடு கூடிய சிவபரம்பொருளே திரு; அதா வது பெறத்தக்க செல்வம். அதை நாடி அடைந்ததன் பயனுய் அடியார்கள் பெற்ற இன்பம் அவர்கள் உள்ளத் தினின்றும் தோத்திரப் பாடல்களாக ஊற்றெடுத்து ஆருய், அருவியாய், பெருவெள்ளமாய்த் தமிழ்நாடு எங்கும் இரண்டாம் நூற்ருண்டுமுதல் பன்னிரண்டாம் நூற்ருண்டு வரை பரவி ஓ டி ய து. அத்தோத்திரப் பாடல்களே அருளிச்செய்தவர் திருஞானசம்பந்தர் முதல் சேக்கிழார்பெருமான்வரை உள்ள இருபத்தேழு அருள் ஆசிரியர்கள் ஆவர். அவைகள் தமிழரசர் வேண்டு கோளின்படி பன்னிரண்டாக வகுக்கப் .ெ ப ற் று த் தொகுக்கப்பட்டன. அத்தொகையே பன்னிரு திரு முறை என்பது. முறை என்னும் சொல் நூல் என்னும் பொருள் கொண்டு நிற்கின்றது. திருமுறை என்பது நிலேயாய செல்வத்தை மக்கள் எளிதாக அடைதற்கு வழிகாட்டும் நூல்.

உயிருக்கு அப்பாலாயும், உயிரினுள் உயிராயும் நின்று இலங்கும் இறைவல்ை ஆட்கொள்ளப்பட்ட நிலே யில் பிறந்த பாடல்களாதலால் திருமுறைகள் சாதா ரண சொற்களுக்கு எட்டாத தனிசக்திகொண்டிருப்பது நியதியே. அவைகளில் பல பாடல்கள் அற்புத நிகழ்ச்சி களின் பொருட்டும் அற்புத சூழ்நிலைகளிலும் பாடப் பட்டவை. இப்பொழுதும் இடர் நீங்க வேண்டின் "மறையுடையாய்” என்ற பதிகத்தையும், விஷ சுரக் நீங்கவேண்டின் அவ்வினைக்கு இவ்வினையாம்” என்ற பதிகத்தையும் திருமணம் விரும்புவோர் சடையாய் எனுமால்” என்னும் பதிகத்தையும், இவ்வாறு வேறு