பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is:

குறிப்பிட்ட நோக்கங்கள் நிறைவேறுமாறு குறிப்பிட்ட பதிகங்களேயும் பாராயணம் செய்து மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்று நம்பப்படுகிறது. அது எவ் வாருயினும், பாடுவோரையும், பாடக்கேட்போரையும் இறையுணர்வில் விரைவில் ஈடுபடச் செய்யும் ஆற்றல் படைத்தது திருமுறை என்பது மக்கள் அனைவரும் அனுபவத்தில் கண்டதோர் உண்மை.

சிவநெறியேயன்றி, இறைவன் ஒருவன் உண்டு என்றும், இறைவன் மீது அன்புகொண்டு வாழ்க்கை நடத்துதலே இன் பத்தின் வழி என்றும் நம்புபவர் எந்த சமயத்தினர் ஆயினும், அவர்கள் அனைவரும் திருமுறைப் பயிற்சியின்மூலம் நலன்கள் பலவும் பெற லாம். இத்தோத்திரப் பாடல்களைப் பயிலும் வாய்ப்புப் பெற்ற கிருத்துவசமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர், நம் நாட்டவர், பலர் அதன்மூலம் தாங்கள் பெற்ற அரிய அனுபவங்களே வி ய ந் து போற்றியிருக்கின் ருர்கள். தங்கள் தங்கள் மொழிகளில் திருமுறைகளின் பல பாகங்களே அவர்கள் மொழி பெயர்த்தும் இருக் கிருர் கள்.

இப்பொழுது வழக்கிலிருக்கும் மொழிகளில் எல் லாம் தமிழே மிகவும் தொன்மையானது; இலக்கிய உயர்வும் உடையது. தமிழ் இலக்கியத்தின் அரும்ை யையும் பெருமையையும் நேரில் தெரிந்து அனுபவிக்க விரும்புவோர் அனைவருக்கும் திருமுறைப் பயிற்சி இன்றியமையாதது. திருமுறைப் பாடல்கள் பொருட் செறிவும், சொல் நயமும், நடையழகும், கொண்டவை. சமயப்பற்று உள்ளவரேயன் றி இலக்கியப் பற்று உடை யவரும் திருமுறைப் பாடல்களே ப் பயிலுவதால் அகன்ற அறிவும், ஒழுங்கு படுத்தப்பட்ட வாழ்க்கையும் அடைவார்கள்.