பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

பன்னிரு திருமுறை வரலாறு


யார் எஞ்ஞான்றும் ஈறிலாப் பெருஞ் செல்வத்தைத் தந்தருளுவன ஆவடுதுறையிலமர்ந்த எந்தையார் திருவடி மலர்களன் ருே’ என எழுந்து ஆவடுதுறை மாசிலாமணியீசர் திருமுன் பெய்தி நின்று நீள் நிதி வேண்டினுர்க்கு ஈவதொரு பொருளேயும் உடையே னல்லேன். நின் திருவடித் துணையன்றி மற்றென் றைக் கனவிலும் அறியேன்” எனக்கூறி இறைவனது பேரருளே வினவும் நிலையில்,

இடரினுந் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமா றிவதொன்றெமக்கில்லேயேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறையரனே’’

என நாலடிமேல் வைப்பாகிய திருப்பதிகத்தினைப் பாடிப் போற்றினர். இவ்வாறு பொருளே விரும்பி இனிய தமிழ்ப் பதிகத்தைப் பாடிப் போற்றிய ஞான சம்பந்தரது விருப்பத்தினே நிறைவேற்றக் கருதிய இறைவரது திருவருளால் சிவபூதம் ஒன்று, வந்து தோன்றி ஆ யி ர ம் பொன்னடங்கிய பொற்கிழி யொன்றை இறைவர் சந்நிதியிலுள்ள பீடத்தின்மேல் வைத்து இப்பொற்கிழியானது எடுக்க எடுக்கக் குறை யாத உலவாக்கிழி. இறைவரருளால் உமக்கு அளிக் கப்பெற்றதாகும் எனக்கூறி மறைந்தது.

ஆவடுதுறையிறைவர் அருளிய உலவாக்கிழி யினைத் தலைமேற் கொண்டு போற்றிய ஆளுடைய பிள்ளையார், அப் பொன் முடிப்பினைத் தந்தையார் கையிற் கொடுத்து மு ழு மு. த ற் கடவுளாகிய சிவபெருமாைெருவனேயே முதல்வகைக் கொண்டு பண்டை மறைமுறைப்படி செய்தற்குரிய நல்ல வேள்வி களே நீவிச் செய்தற்குமட்டு மன்றித் திருக்கழுமலத்தி லுள்ள வேதியரனே வரும் செய்தற்கும் வேண்டும்