பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

பன்னிரு திருமுறை வரலாறு


மேற்குப் பீடத்தில் வைக்கப்படும் காசினே யெடுத்து அவ்வாறே சிவனடியார்களுக்கு நாடோறும் திருவமு தளித்து வந்தனர். இங்ங்னம் நிகழும் நாளில் திருநாவுக்கரசரது திருமடத்திலேயுள்ள அடியார்கள் காலம்பெற அமுது செய்தனர். ஞான சம்பந்தர் திருமடத்திலுள்ள அடியார்கள் அமுது செய்தற்குக் காலந்தாழ்ந்தது. அஃதுணர்ந்த பிள்ளே யார், தம் திருமடத்தில் திருவமு தாக்குவோரை நோக்கி, நாடோறும் அமுதளிக்கக் காலந்தாழ்ப்பதற்குரிய காரணமென்ன எனக் கேட்டார். அதற்கு அவர்கள் பிள்ளையாரைப் பணிந்து, தாங்கள் இறைவன் பாற் பெறும் படிக்காசைப் பெற்றுப் பண்டம் வாங்குவதற்குக் கொண்டு சென்ருல் அதற்கு வட்டம் கேட்கிருர்கள். திருநாவுக்கரசர் பெற்ற காசை வட்டமின்றி யேற்றுக் கொள்கிறர்கள். இதுவே காலந்தாழ்த்தற்குக் காரணம் எனக் கூறினர். அதனே யுணர்ந்த பிள்ளே யார் அப்ட மூர்த்தி கைத்தொண்டு செய்தலால் அவர் பெறுங் காசு வட்டமின்றி ஏற்றுக்கொள்ளப்பெறுகிறது என்று சிந்தித்து இனிவரும் நாட்களிலே தருங்காசு வாசி தீரும்படி இறைவனைப் பாடிப்போற்றுவேன்’ எனத் திருவுளங்கொண்டார். மறுநாட் காலேயிலே விழிமிழலே யிறைவனே ப் பணிந்து,

வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏசலில்லேயே.

என்னுந்திருப்பதிகம் பாடி, வாசியில்லாத நல்ல காசினேப் பெற்ருர். அதனைப் பெற்ற அடியார்கள், பண்டம் வாங்கு தற்குச் சென்று கொடுத்தபோது வணிகர்கள், இக்காசு மிக நன்று, வேண்டுவன தருவோம்’ எனச் சொல்லி உணவுப் பொருளேத் தந்தார்கள். அன்று தொடங்கிப் பிள்ளையார் திருமடத் திலும் அடியார்கள் உரிய காலத்தில் திருவமுது செய் தார்கள். இங்ங்னம் இருவருடைய திருமடங்களிலும்