பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் ! #5

இதுவென் கொல் சொல்லாய்’ என வரும் தொடரால் மானும் மழுவுங் கைக்கொள்ளாது வீற்றிருந்தருளுந் தோணியப்பரது திருவுருவத்தை விழிமிழலேயிற் கண்ட அற்புத நிகழ்ச்சியை வெளியிட்டருளிய திறம் உளங் கொளத் தக்கதாகும்.

வாசித்தீரக் காசு பெறுதல்

திருஞான சம்பந்தர் தம்மை யழைக்க வந்த காழி மறையவர்களுக்கு விடைகொடுத்தனுப்பிவிட்டுத் தாம் திருதாவுக்கரசருடன் விழிமிழலேயில் தங்கியிருந்தனர். அக்காலத்தில் மழையின் மையால் பஞ்சமுண்டாயிற்று. உயிர்களெல்லாம் பசியால் வருத்தமுற்றன. சிவனடி யார்களேயும் பசி நோய் வருத்திற்று. அதுகண்டு ஞானசம்பந்தரும் நாவரசரும் கண்ணுதலோன் திரு நீற்றுச் சார்வினுேர்க்குங் கவலே வருமோ என்று கருத் திற்கொண்டு சிவனடிகளைச் சிந்தித்து இரவில் துயில் கொண்டனர். அந் நிலேயில் வீழிமிழலேயிறைவர் அவ் விருவர்க்கும் கனவில் தோன்றி நீங்கள் கால நிலைமை யால் மனத்தில் வாட்டமடையீர் ஆயினும் உங்களே வழிபடுகின்ற அடியார்களுடைய வருத்தத்தை நீக்கும் பொருட்டு இப்பஞ்சம் நீங்குமளவும் நாம் நாள்தோறும் இத் திருக்கோயிலின் கிழக்குப் பீடத்திலும் மேற்குப் பீடத்திலும் ஒவ்வொரு காசு நுமக்குத் தருகின்ருேம். பஞ்சம் நீங்கியபின் அக்காசும் தவிர்வதாகும்’ என்று சொல்லி மறைந்தருளினர். ஆளுடைய பிள்ளேயார் விழித்தெழுந்து இறைவனருளேப் போற்றித் திருநாவுக் கரசருடன் திருக்கோயிலிற் புகுந்தபோது கிழக்குப் பீடத்திலே காசு இருத்தலேக் கண்டு விருப்புடன் திருவருளேத் தொழுது அதனே எடுத்து இறைவனடி யாரானர் எல்லாரும் வந்து உண்பார்களாக’ என இரண்டு காலங்களிலும் பறைசாற்றித் தெரிவித்து, தம்முடைய திருமடத்தில் வரும் அடியாரனவருக்கும் நாடோறும் திருவமுதளித்திருந்தனர். அப்பரடிகளும்