பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் f : 7

எண்ணிறந்த சிவனடியார்கள் திருவமுது செய்து மகிழ்ந்துறையும் காலத்தே எங்கும் மழை பெய்து நெல் முதலிய தானியங்கள் நிறைய விளைந்தமையால் உயிர்களெல்லாம் துன்ப நீங்கி யின் புற்றன.

பிள்ளேயார் திருவிழிமிழலையிறைவரை நோக்கி, * வாசி தீரவே காசு நல்குவீர்” என வெளிப்படையாக வேண்டுதலால் இத்திருப்பதிகம் பிள்ளையார் பெற்ற படிக்கா சின் வட்டந் தீர்தற் பொருட்டு அருளிச் செய்யப்பெற்றதென்பது நன்கு விளங்கும். இங்ங்னம் பாடிப்போற்றிய பிள்ளே யாரது வேண்டுகோளேச் செவிமடுத்தருளிய விழிமிழலைப்பெருமான், பிள்ளே யாருக்கு வாசிதீரக் காசளித்தருளினர் என்பது வரலாறு. திருநாவுக்கரசர் தம் கெழுதகை நண்ப ராகிய திருஞானசம்பந்தரைக் குறித்துப் பேசும் நிலேயில்,

  • பாடிப்பெற்ற பரிசில் பழங்காக வாடி வாட்டந் தவிர்ப்பார் ’’

எனப் புகழ்ந்து போற்றுதலால் இவ்வரலாற்றின் உண்மை நன்கு தெளியப்படும். ஞானசம்பந்தர் பெற்ற காசு வாசியுளதாதற்கு அதன் பழமையே காரணம் என்பதனே, பரிசில் பழங்காசு என்ற தொடரால் அப்பரடிகள் நன்கு விளக்கியுள்ளமை காண லாம்.

சீகாழிப்பதியிற் பெரிய பெருமாட்டியுடன் தோணி மீது வீற்றிருந்தருளும் பெருமானேக் காண விரும்பிய திருஞானசம்பந்தரைக் கழுமல நகர்க்குப்போகவிடாது தோணி புரத் திருக்கோலத்தை விழிமிழலே விண்ணிழி விமானத்திலேயே காட்டியருளிப் பிள்ளே யாரையும் திருநாவுக்கரசரையும் திருவிழிமிழலையிலேயே தங்கப் பணித்து, பஞ்சம் வந்தபொழுது அவ்விரு பெருமக்க ளுக்கும் நாடோறும் ஒவ்வொரு காசு தந்தருளிய