பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞானசம்பந்தர் 137

கொண்டு போற்றித் திருக்காப்பு நாணுகிய கயிற்றை அவிழ்த்து அத்திருமுறையேட்டினே விரித்துப் பார்த் தருளினர். அவ்வளவில்,

போக மார்ந்த பூண் முலேயாள் தன்ளுேடும் பொன்னகலம் பாக மார்ந்த பைங்கண் வெள்ளேற் றண்ணல் பரமேட்டி ஆக மார்த்த தோலுடையன் கோவண ஆடையின் மேல் நாக மார்த்த நம்பெருமான் மேயது நள்ளா றே.

என்ற பாடலே முதலாகவுடைய திருநள்ளாற்றுத் திருப் பதிகம் வந்து நேர்பட்டது. அதுகண்ட பிள்ளே யார் அத்திருப்பதிகத்தினையே விரும்பித் திருநள்ளாற்றுப் பெருமானேத் தொழுது அப்பதிக ஏட்டினேக் கழற்றிக் கையிலே எடுத்துக்கொண்டார். என்னே ஆளுடைய இறைவனது திருநாமமே என்றும் நிலைபெற்ற மெய்ப் பொருளாகும் என உலக மாந்தர்க்கு அறிவுறுத்தும் நிலேயில் இத்திருப்பதிக ஏடு தீயில் வேவாது நிலே பெறுக’ என்று சொல்லித் தளிரிள வளரொளி' என்ற திருப்ப திகத்தினேப் பாடி இறைவனே வழிபட்டுப் போக மார்த்த பூண்முலேயாள் என்னுந் திருப்பதிக ஏட்டினை யாவரும் காணத் தீயினில் இட்டருளினர்.

இங்ங்னம் ஞானசம்பந்தப் பிள்ளையாரால் தீயி லிடப்பெற்ற ஏட்டில் எழுதப்பட்ட திருப்பதிகம், பரஞானம் அபரஞான மென்னும் இரு தனங்களே யுடைய உமாதேவியாரை ஒரு பாகத்திற் கொண்டு விளங்கும் எண் பேருருவினணுகிய சிவபெருமானே ப் பொருளாகக் கொண் டமையால், கொழுந்துவிட் டெரியும் அத்தீயினுள்ளே எரிந்து சாம்பலாகாது பச்சையாய் விளங்கிற்று. அதுகண்ட சமணர்கள் தங்கள் நூற்பொருளெழுதப்பட்ட ஏட்டினே இஃது என் குைமோ” என்ற கவலேயுடன் நெருப்பிலிட்டார்கள். அவர்களால் இடப்பட்ட அவ்வேடு தீயில் வெந்து சாம்பலாயிற்று. திருஞானசம்பந்தர், தாம் தீயில்