பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

பன்னிரு திருமுறை வரலாறு


தகனஞ்செய்த சாம்பலேயும் எலும்பினேயும் ஒரு குடத்தி லிட்டுச் சேமித்து வைப்பேன்’ எனத் துணிந்தார். அவ்வாறே தன்மகளது உடம்பைத் தீயிலிட்டு வெந்த சாம்பலேயும் எலும்பையும் ஒரு குடத்திலே யிட்டுக் கன்னிமாடத்தில் வைத்துப் பூசனை செய்துவந்தார். இந் நிலேயில் திருஞானசம்பந்தர் திருவொற்றியூரில் அடியார்களுடன் எழுந்தருளியுள்ளார்’ என அவ்வூர் மக்கள் சிவநேசர்க்குத் தெரிவித்தார்கள். அச்செய்தி கேட்டு மகிழ்ச்சியுற்ற சிவநேசர், மயிலாப்பூராகிய தம் பதியை அணிசெய்து ஞானசம்பந்தரை எதிர் கொண்டழைக்கச் சென் ருர், சம்பந்தரும் மயிலாப்பூர்ப் பெருமானே வணங்கும் விருப்புடையராய்த் திருவொற்றி ஊரிலிருந்து புறப்பட்டு எதிரே வந்தருளினர். சிவ நேசராகிய அவ்வணிகர் காழிப்பிள்ளே யார் அமர்ந் தருளும் முத்துச்சிவிகையின் முன்னே வீழ்ந்து வணங்கினர். ஞானசம்பந்தர் சிவிகையிலிருந்து இறங்கித் தம்மை வணங்கி நிற்கும். சிவநேசருடைய செயல்களே அடியார்கள் சொல்லக்கேட்டு அவருடன் திருமயிலாப்பூரை அடைந்தார்.

ஆளுடைய பிள்ளேயார், மயிலேயிலுள்ள திருக் கபாலீச்சரத்திறைவனே வணங்கிப் புறத்தே போந்து சிவநேசரை நோக்கி, ஒருமைவைத்த நல்லுனர் வுடையீர், உம்ம ற் பெறப்பட்ட மகளது என்பு நிறைந்த குடத்தினே உலகவர் அறிய இத்திருக்கோ யிலின் புறவாயிலிற் கொணர்வீராக’ எனப் பணித் தருளினர். சிவநேசரும் வெந்த சாம்பலோடு என்பு நிறைந்த குடத்தினைச் சிவிகையில் வைத்துக் கொணர்ந்து கபாலீச்சரத்து இறைவன் திருமுன்னர் வைத்து வணங்கினர். உலகமாந்தருக்கு உறுதிப் பொருளே உணர்த்தத் திருவுளங்கொண்ட ஆளுடைய பிள்ளையார், மயிலே நகரத்தாரும் புறச் சமயத்தாரும் காணக் கோயில் வாயிலேயடைந்து, அங்கு வைக்கப் கப்பட்டுள்ள என்பு நிறைந்த குடத்தைப்பார்த்து இறைவனது திருவருளே நினேந்து, மக்கள் அடை தற்