பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

பன்னிரு திருமுறை வரலாறு


வேண்டுவன ஈந்தும் வந்த விருந்தினரை உபசரித்தும் செந்தமிழ் நாவலர்க்குப் பெரு பொருளேப் பரிசிலாக நல் க்யும் இவ்வாறு உலகத்துள்ளார்ய வர் க்கும் இல்லே யென்னது ஈந்து மகிழும் அருளாளராகத் திகழ்ந்தார்.

அக்காலத்தில் சமணசமயத் துறவிகள் பலர், தமிழகத்திற் சமண சமயத்தைப் பரப்பவேண்டு மென் னும் பெருவிருப்புடையா ராய்ப் பாடலிபுத்திரம் முதலிய பதிகளிற் சமண் பள்ளிகளும் பாழிகளும் அமைத்துக்கொண்டு வாழ்ந்தார்கள். அவர்கள் தாம் பெற்றுள்ள தருக்கசாத்திர வன்மையாலும் சீவகா ருணியமாகிய அருளொழுக்கத்தினேப் போற்றியுரைக் கும் அறிவுரைகளாலும் தமது சமயத்தைத் தமிழ் நாடெங்கும் பரப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். நில்லாத உலகியல்பு கண்டு இனி நிலேயாவாழ்க்கை யில் ஈடுபடுவேனல்லேன் எனத் துணிந்து, துறந் தார் தம் துரநெறிக்கட் செல்ல விரும்பிய மருள் நீக்கீயார், எல்லாச் சமயங்களுள்ளும் சிறப்புடைய மெய்ச்சமயம் இதுவெனத் தெரிந்துணரும் ஆர்வ முடைய ராய்ச் சிவபெருமானது திருவருள் கைகூடப் பெருமையால் கொல்லாமையாகிய நல்லறப் போர் வையில் மறைந்துலவும் சமணசமயத்திற் சேரக் கரு கினர். பாடலிபுத்திரம் என்ற ஊரையடைந்து சமணமுனிவர்கள் வாழும் தவப்பள்ளியின் மருங்கு அனேந்தார். அங்குள்ள சமணர்கள், பேரின் பமாகி . விடு பேற்றினை அளிக்கவல்ல மெய்ச்சமயம் எங்கள் ச ம ன ச ம ய ம கி ய இதுவே என மருள் நீக்கி யார்க்கு எடுத்துரைத்து அவரைத் தம்சமயத்தில் ஈடு படுத்த முயன்ருர்கள். அவர்களது அறிவுரையில் ஈடுபட்ட மருள் நீக்கியார், சமணசமயத்திற் சேர்ந்து அச்சமயத்திலுள்ள அரியபல நூல்களே நன்கு பயின்று தேர்ந்தார். அதுகண்டு மகிழ்ந்த சமணர்கள், அவ ரைத் தருமசேனர் என்ற சிறப்புப் பெயராற பாராட்