பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு #89

என இப்பதிகத்து வரும் வேண்டுகோளால் நன்கு விளங்கும். தம்மை வருத்திய கடும் பிணியாகிய சூலே நோயினே இறைவன் விரைவிற் போக்கியருளிய அருள் திகழ்ச்சியை,

சூலே தீர்த்தடியேனே யாட்கொண்டாதே" (6-96-3) எனவும்,

'உடலுறுநோய் தீர்த்தென் னே யாட் கொண்டாரே

(6–96-6) எனவும்,

இடருறுநோய் தீர்த்தென்னே யாட்கொண்டாரே "

(6–96–11) எனவும்,

உறுபிணியார் செறிலொழிந்திட் டோடிப் போளுர் ’

(6.98–5)

எனவும் வரும் தொடர்களால் திருநாவுக்கரசர் தெளி வாக விளக்கியுள்ளமை காணலாம். இங்ங்னம் தமக் கையார் அருளால் சிவநெறியினே மேற்கொண்ட திரு நாவுக்கரசர் சூலே தீர்ந்து இறைவன் திருவருளில் திளேத்த திறத்தினே,

புலனெ டாடித் திரிமனத்தவர்

பொறிசெய் காமத் துரிசடக்கிய புனித நேசத் தொடுதமக்கையர் புணர்வினலுற் று ரைசெயக் குடர்

சுலவு சூலேப் பிணி கெடுத் தொளிர்

சுடுவெ னிறிட் டமன கற்றிய துணி வின்ை முப்புர மெரித்தவர் சுழலிலே பட்டிடுதவத்தினர்

அரையதேவத் திருவடிக்களே.

என்ற பாடலில் நம்பியாண்டார் நம்பி நன்கு புலப் படுத்தியுள்ளமை காண்க.