பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 19 i

சனே நோக்கி, அரசே, எங்களுக்குத் தலைவராய் இருந்த தருமசேனர், தமக்குச் சூலேநோய் வந்த தெனப் பொய் கூறிச் சைவராகி நின் சமயத்தை ஒழித்தார்' என்று கூறினர்கள். அவ்வுரை கேட்டுச் சின் முற்ற பல்லவமன்னவன், குற்ற மிகுந்த உள்ள முடையராய்த் தம் சமயத்தைச் சார் தற் பொருட்டு இவ்வாறு சூல்ேநோய் வந்ததாகப் பொய் கூறிப் புகழ் மிக்க நம் சமயத்தை இகழ்ந்து சிதைத்தல் முறை யாமோ ? எல்லேயற்ற தவமுடைய அ டி. க ோ இத்தகைய குற்றத்திற்கு நம்மால் தரப்படுந் தண்டம் யாது ?’ என வெகுண்டு வினவிஞன். அதுகேட்ட சமணர்கள், கொல்லாமையாகிய நல்லறத்தினே மேற் கொண்டு நடிக்கும் இயல்பினராகலின், "உயர்ந்த நெறியாகிய நமது சமயத்தை அழித்து அரச நீதியாகிய நின்னுடைய ஆனேயையுங்கடந்த பொறியிலியாகிய அவனே நீ தண்டித்து ஒறுத்தல் வேண்டும்’ என்றனர். அப்பொழுது பல்லவ மன்னன் தன் அமைச்சர்களே நோக்கி இம்முனிவர்களாற் சுட்டப்பட்ட தீயோனப் பிடித்து என்பாற்கொண்டு வாருங்கள்’ எனப் பணித்தான்.

அரசனது பணியினை மேற்கொண்ட அமைச்சர்கள் சேனே வீரருடன் திருவதிகையை நோக்கிச் சென்று சி வ ன டி ய | ர கி ய திருநாவுக்க ரசரையடைந்து ‘ஐயன்மீர், நும்மை அழைத்து வரும்படி எம்மை அரசன் ஏவினன்' என்றுரைத்தனர். அதுகேட்ட திருநாவுக்கரசர், 'தனக்குவமையில்லாத தலைவனுகிய சிவபெருமானுக்கு மீள ஆளாய் அவன் திருவடிகளே இடைவிட து சிந்திக்கும் இயல்புடைய நாம், இவ் வுலகில் வேந்தர் யார்க்கும் குடியாக அடங்கி வாழும் எளிமையுடையே மல்லோம். இறப்பதனுக்கு ஒரு சிறிதும் அஞ்சோமாதலால் நமனேக்கண்டு சிறிதும் அஞ்சோம். வஞ்சனே பொய் முதலிய குற்றங்கள்