பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 197

இவ்வாறு பெயக்கண்டும் நஞ்சுண்ட ைமந்த நனி நாக ரிகராகிய நாவுக்கரசரது பண்புடைமையினே விடம் அடையார் இட ஒள் அமுதாத் துற்றவன்' எனவரும் தொடரால் நம்பியாண்டார் நம்பி நன்கு புலப்படுத்தி யுளளாா.

நஞ்சினே உண்டும் உயிர் பிழைத்திருந்த நாவுக் கரசரைக் கண்ட சமணர்கள் இவனுக்கு நஞ்சமும் அமு. தாயிற்று. இனி இவன் பிழைப்பாளுகில் நமக்கெல்லாம் நாசமே என்று நடுக்கமுற்றனர். அரசனிடத்திற் சென்று நாம் நஞ்சு கலந்து உண்பிக்கவும் நமது சம யத்திற் கற்றுக்கொண்ட மந்திர வன்மையினுல் நஞ்சு தன்னேக் கொல்லாதபடி தடுத்துவிட்டான். அவன் இறவா திருப்பாளுயின் எம்முடைய உயிரும் நினது அரசாட்சியும் அழிவது திண்ணம் என முறையிட்டார் கள். அவ்வுரை கேட்ட பல்லவன் இனி அவனேக் கொல்லுதற்குரிய உபாயம் யாது’ என வினவினன். “நின் பட்டத்து யானே யைக் கட்டவிழ்த்து அவனுக்கெ திரே விடுவதே செய்யத் தகுவது, என்று சமணர்கள் கூறிஞர்கள். அரசனும் அங்ங் ைமே செய்யப் பணித் தான். கொடியோர், திருநாவுக்கரசர்க்கு எதிரே சின மிக்க மதயானையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். திரு நாவுக்கரசர், தன் மேல் யானே வரக்கண்டும் சிறிதும் அஞ்சாது சிவபெருமானே த் தியானித்து அவ் யானையை நோக்கி நாம் எல்லாமுடைய இறைவர்க் குச் சுற்றத்தார்களாகிய தொண்டர்களாவோம். ஆத லால் யாதொன்றுக்கும் அஞ்சவேண்டுவதில்லே. இனி யாம் அஞ்சும்படி வருவதாகிய இடையூறெதுவுமில்லே என அறிவுறுத்தும் கருத்துடன்,

சுண்ணவெண் சந்தனச் சாந்தும் சுடர்த்திங்கட்

சூளாமணியும் வண்ணவுரிவை யுடையும் வளரும் பவள நிறமும் அண்ணலரண் முரனே றும் அகலம்வளாய அரவும் திண்னன் கெடிலப் புனலும் உடையாரொருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்றுமில்லே அஞ்ச வருவதுமில்லை.