பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

### பன்னிரு திருமுதை வசீலாரி

எனவும் வரும் சேக்கிழா வாய்மொழிகளில் மாசில் விணயும் என்ற இத் திருக்குறுந்தொகையின் சொல் லும் பொருளும் எடுத்தாளப் பெற்றமை இங்கு நினைக் கத் தகுவதாகும்.

ஏழு நாட்கள் சென்றபின் பல்லவ மன்னன் சமணர் களே அழைத்து நீற்ற ைபயைத் திறந்து பாருங்கள்’ என்ருன். அவர்கள் நீற்றறையைத் திறந்தபொழுது அதனுள்ளே திருநாவுக்கரசர் எத்தகைய து பமு மின்றி இனிதிருத்தலேக்கண்டு தமக்குள்ளே வியந் தவர். எனினும் அரசனிடத்திற்சென்று * அரசே, அவன் முன்னே தம்முடைய சமயத்தில் இருந்து பெற்ற மந்திரவலியினலே வேவா மற் பிழைத்திருந் தான். இனி அவனுக்கு நஞ்சூட்டுவதே தகும் எனக் கூறிஞர்கள். அரசனும் அவ்வாறே செய்யுங் கள் எனப் பணித்தான். அமணர்கள் வஞ்சனேயால் நஞ்சு கலந்த பாலடி.சிலே நாவுக்கரசர்க்கு உண்ணத் தந்தார்கள். இறைவனது திருவைந்தெழுத்தை இரவும் பகலும் மறவாதோதும் மாண் புடைய திருநா வுக்கரசர், சமணர்களது வஞ்சனையைத் தெரிந்து கொண்ட நிலையிலும் நாதனடியார்க்கு நஞ்சமும் அமுதாம்’ என்று கூறி, நஞ்சு கலந்த பாலடி சிலே உண்டு இறைவனருளால் எத்தகைய தீங்குமின்றி இனிதிருந்தார்.

கண்ணுேட்டமின்றி அமணர் தந்த கொல்லுமியல் பினதாகிய கொடிய நஞ்சினையும் விரும்பியுண்ணத் தக்க நல்லமிழ்தமாக மாற்றியருளிய சிவபெருமானது பேரருட்டிறத்தை,

துஞ்சிருள் காலே மாலே தொடர்ச்சியை மறந்திராதே அஞ்செழுத் தோதின் நாளும் அரனடிக் கன்பதாகும் வஞ்சனேப் பாற்சோருக்கி வழக்கிலா அமணர் தந்த தஞ்சமு தாக்குவித்தார் நகணிபள்ளியடிகளாரே.

எனவரும் திருநேரிசையில் திருநாவுக்கரசடிகளார் தெளிவாகக் குறிப்பிட்டுப் போற்றியுள்ளமை காண்க