பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206

பன்னிரு திருமுறை வரலாறு


அங்குத் தோன்றி ஆளுடைய அரசர் திருத்தோல் களில் மூவிலேச்சூலமாகிய இலச் சினே யை இடப இலச் சினையுடன் பொறித்துச் சென்றது. அதனே புணர்ந்த திருநாவுக்கரசர், மகிழ்ந்து சிவபெருமான் திருவருளே நினைந்து கண்ணிர் சொரிய நிலமிசை வீழ்ந் தெழுந்து ஆர்வம் பெருக உய்த்தேன் என மொழிந்து இறைவன் திருவடிகளேப் பரவி இன் புற்ருர்.

தில்லைக்கூத்தனை வணங்குதல்

துங்கானே மாடச் சுடர் க்கொழுந்தாகிய இறைவனே வணங்கி இனிதுறையும் வாகீசர், திருநெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் முதலிய தலங்களைப் பணிந்து தமிழ்மாலே சாத்திக் கிழக்குத்திசை நோக்கித் திரும்பி நிவா நதியாகிய வெள்ளாற்றின் கரைவழியே சென்று எல்லேயிலாச் செல்வம் நிறைந்த தில்ல்ே யம்பலத்திலே திருக்கூத்தியற்றும் கூத்தப்பெரும னே வணங்கி ஊலுைம் உயிராலும் அடைதற்குரிய உ று தி ப் ப ய னே அடைய விரும்பித் தேனுரு மலர்ச்சோலேத் திருத்தில்லே மருங்கணேந்தார். அறிவிற் பெரியவர் ஆகிய அடிகளார், பெரும்பற்றப் புலியூராகிய கில்லேப்பதியின் மேலே வாயில் வழியாக உட்புகுந்து சிவமே நிலவிய திருவீதியைத் தொழுது வலங்கொண்டு எழுதிலேக் கோபுரத்தை இறைஞ்சிப் பொன்மாளிகையினே வலம்வந்து, ●ぎエ 5さ汗等ö)#_。 யினேக் கண்ணுற்று ம ன் று ன் ந - ம | டு ம் அண்ணலார் திருமுன் அணேந்தார். அப்பொழுது கூத்தப்பிரான் திருநாவுக்கரசரை நோக்கி, என்று வந்தாய் சன வினவும் அருள் நோக்கத்துடன் காட்சி கொடுத்தருளினர். அத் திருக்குறிப்பை யுணர்ந்த திருநாவுக்கரசர், இரண்டுகைகளும் தலைமேற்குவிய, கண்களினின்றும் ஆனந்தக்கண்ணிர் மழையெனச் சொரிய, மனங்கசிந்துருக, உடல் நிலமிசைப் பல முறை பணிந்தெழ, மன்ருடும் ஐயன் திருக்கூத்தை எதிர்கண்டு ஆர்வமுறக் கும்பிட்டுக் கருநட்ட கண்டனை யென்னுந் திருவிருத்தம் பாடிப் போற்றினர்.