பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 209

ஒருவரொருவரைக் காணப் பெற்றதற்கு மிகவும் மகிழ்ந்து உள்ள நிறை காதலினுல் ஒரு ரொருவரிற் கலந்த நட்புரிமையுடையராய், அருட்கடலும் அன்புக் கடலும் இணைந்து வந்தாற்போலவும்,சைவ சமயத்தின் இரு கண்கள் போலவும், இறைவனும் உலகம் ஈன்ற அம்மையும் ஆகிய இருவருடைய திருவருளும் ஒருங்கு தோன்றிற்ை போலவும் திருத்தோணி புரத் திருக்கோ யிலிற் சென்று சேர்ந்தார்கள். ஆளுடைய பிள்ளேயார். அப்பரை நோக்கி உங்கள் தம்பிரான ரைப் பாடுவி ராக’ என வேண்டிக்கொண்டார். திருநாவுக்கரசர், பெரிய பெருமாட்டியுடன் தோணிமீது வீற்றிருக்கும் பெருமானே ப் பார் கொண்டு மூடி யெனும் முதற் குறிப் புடைய திருவிருத்தம் பாடிப் போற்றினர். பின்பு திருஞானசம்பந்தப் பிள்ளேயாரது திருமடத்தில் எழுத் தருளி அவர் அன்புடன் விருந்து செய்து உபசரிக்க அவருடன் அளவளாவி மகிழ்ந்திருந்தார்.

நல்லூரில் திருவடி சூட்டப்பெறுதல் இங்ங்ணம் பல நாள் அடியார்களுடன் சீகாழிப் பதியில் தங்கிச் சிவபெருமானைப் போற்றி மகிழ்ந்த திருநாவுக்க ரசர், சோழநாட்டிலுள்ள சிவதலங்களெல் லாவற்றையும் வழிபட வேண்டுமென் னும் பெரு வேட்கை யுடையராய்த் தம்முடைய விருப்பத்தைத் திருஞானசம்பந்தப் பிள்ளையார்க்குத் தெரிவித்து அவ ருடன் திருக்கோலக் காவிற்குச் சென்று இறைவனே இறைஞ்சிப் போற்றினர். பின்பு ஞான சம்பந்தர்பால் விடைபெற்று அங்கிருந்து புறப்பட்டுக் கருப்பறியலூர், புன்கூர், நீடூர், குறுக்கை, நின்றியூர், நனிபள்ளி ஆகிய தலங்களேப் பணிந்து பாடினர். காவிரியாற்றின் இரு கரையிலுஞ் சென்று செம்பொன் பள்ளி, மயிலாடுதுறை, திருத்துருத்தி, வேள்விக்குடி, எதிர்கொள்பாடி, கோடிகா, ஆவடுதுறை, இடையிருது, நாகேச்சரம், பழையாறை முதலிய தலங்களே வணங்கித் திருச்சத்தி