பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210

பன்னிரு திருமுறை வரலாறு


முற்றத்தைச் சென்றடைந்தார். மலேமகளாராகிய உமாதேவியாரது அன்பிற் சிறந்த பூசனையை யேற்று மகிழும் என்றுமினிய பெருமாளுகிய சிவக்கொழுந் தீசரை இறைஞ்சி நின்று ‘எம்பெருமானே, கொல்லுந் தொழிலுடைய கூற்றுவன் என்னுயிரை இவ்வுடம்பி னின்று பிரித்து வருத்துதற்கு முன்னமே நின்னுடைய செந்தாமரை மலர் போலும் அழகிய திருவடிகளே என் தலேமேற் சூட்டியருள்வாயாக’ என வேண்டிக்கொள் ளும் முறையில்,

கே. வாய் முடுகி யடு திறற் கூற்றம் குமைப்பதன்முன் பூவாரடிச் சுவ டென்மேற் பொறித் துவை போகவிடில் மூவா முழுப்பழி மூடுங்கண் டாய் முழங்குந் தழற்கைத் தேவா திருச்சத்தி முற்றத் துறையுஞ் சிவக்கொழுந்தே.

எனவரும் திருப்பதிகத்தைப் பாடிப் போற்றினர். இவ் வேண்டுகோளேச் செவிமடுத்த சிவபெருமான், நாவுக் கரசரை நோக்கி நல்லூருக்கு வா’ எனப் பணித்தரு ளினர். அவ்வருள்ம்ொழி கேட்டு அகமகிழ்ந்த அப்ப ாடிகள், திருச்சத்தி முற்றத்திற் சிவக்கொழுந்தீசரை மகிழ்ந்திறைஞ்சி அவர் நன்மை பெருக அருளிய அருளிப்பாட்டின் வண்ணம் திருநல்லூரை யடைந்து இறைவரை வணங்கி மகிழ்ந்தெழுந்தார். அப்பொழுது சிவபெருமான், உன்னுடைய நினேப்பதனே முடிக்கின் ருேம் என நாவுக்கரசர்க்கு உணர்த்தி, அவர் தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டியருளினர். திருநாவுக் கரசர் தமக்கு அருள்புரிந்த இறைவரது பெருங்கருணேத் திறத்தை வியந்து.

நினேந்துருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினேகள் நீங்க வைத்தார் சினந்திருகு களிற்றுரிவைப் போர்வை வைத்தார்

செழுமதியின் தளிர்வைத்த ர் சிறந்து வானேர் இனந்துருவி மணிமகுடத் தேறக்துற்ற

இனமலர்கள் போதவிழ்ந்து மதுவாய்ப்பில்கி