பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

220

பன்னிரு திருமுறை வரலாறு


கிருந்து புறப்பட்டு வலிவலம், கீழ்வேளுர், கன்ருப்பூர் ஆகிய தலங்களே ப் பணிந்திறைஞ்சி மீண்டும் திருவாரூர் வந்தடைந்தார். அப்பொழுது ஆரூரில் திருவாதிரைத் திருநாளில் வீதிவிடங்கப்பெருமான் தி ரு வு ல ப் போந்தருளியது கண்டு அடியார்களுடன் வணங்கி மகிழ்ந்திருந்தார்.

திருப்புகலுர ைஉதல்

பின்பு திருப்புகலூர்ப் பெருமானே யிறைஞ்ச விரும்பிய நாவரசர் ஆளுதைத் தொழுது நீங்கிப் பல தலங்களேயும் பணிந்து பாடித் திருப்புகலூர் மருங் கனேந்தார். அப்பொழுது திருப்புகலூரில் முருக நாயனர் திருமடத்தில் எழுந்தருளியிருந்த திருஞான சம்பந்தப் பிள்ளே யார், அடியார்களுடன் அப்பமூர்த்தி கனே எதிர்கொண் டார். இருவரும் ஒருவரொருவரை வணங்கி மகிழ்ந்தனர். ஆளுடைய பிள் ாேயார், திருநாவுக்கரசரை நோக்கி அப்பரே, நீவிர் வரும் ந்ாளில் திருவாரூரில் நிகழ்ந்த பெருமையினே விரித் துரைப்பீராக’ என வேண்டினர். அப்பரடிகளும் வீதி விடங்கப் பெருமானது திருவளர் ஆதிரை நாளின் பெருமையினே இன்னதன்மைய தென்று எவ்வாறு

உரை செய்வேன்’ என்று சொல்லி,

முத்து விதான மணிப்பொற் கவரி முறையாலே பத்தர் க ளோடு பாவையர் சூழப் பலிப்பின் னே வித்தகக் கோல வெண்டலே மாலே விரதிகள் அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அதுவண்ணம்.

என வரும் திருப்பதிகத்தைப் பாடிப் பரவினர். இப் பதிகம் முழுவதும் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் எனத் திருவாரூரில் நிகழ்ந்த திருவாதி ைரத் திருவிழாவின் பெருமை விரித்துரைக்கப் பெறுதலால் இது திருவாதிரைத் திருப்பதிகம் என வழங்கப்பெறுவ தாயிற்று.