பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசர் வரலாறு 23 ;

இச்செயலே பெரிதும் மதிக்கத் தக்கது.' என்பார், வாய்மூரிறைவர் தம்மைத் தேடிவந்த முன்னிகழ்ச் சிக்கு ஞான சம்பந்தர் தம்மைத்தேடி வருதலாகிய பின்னிகழ்ச் சியை உவமையாகக் கூறிப் பேற்றினர். எத்தகைய பெரியோர்க்கும் இறைவனது திருக்குறிப்பு எளிதின் உணரத்தக்க தன் று எனத் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்து வார், ஞானசம்பந்தர்க்கு விழிமிழலையிறைவர் வட்டங் கொடுத்து மாற்றவேண்டிய பழங்காசினை முதலில் தந்து. பின் அவர் வாசி தீரவே காசு நல்குவீர் என வேண்டிப்பாட வட்டந் தீர்த்தருளிய நிகழ்ச்சியை எடுத்துரைத்தார் ஞானசம்பந்தர் அப்பரடிகள் பற் கொண்ட நட்பின் பெருமையும் அப்பர் ஆளுடைய பிள்ளேயார் பால் வைத்த பேரார்வமும் மேற்காட்டிய திருக்குறுந்தொகையால் நன்கு புலளுதல் காண்க.

இவ்வாறு சிவபெருமான், திருநாவுக்கரசரைத் திருவாய்மூர்க்கு வருக என அழைத்துவந்து இடைவழி யில் மறைந்து பின் ஞானசம்பந்தர் நாவுக்கரசர் ஆகிய இருவருக்கும் ஆ ட ல் க ச ட் டி அருள்புரிதற்குரிய காரணம், திருநாவுக்கரசர் மனக்கவலேயுடன் திருமடத் தின் ஒருபால் அஞ்சித் துயில் கொண்டமையேயாம். தாம் பத்துப் பாடல்கள் பாடுமளவும் மறைக்கதவம் திறக்கத் தாழ்த்த அருமையையும் ஒான சம்பந்தர் முதற் பாடலேப் பாடிய அளவில் மறைக்க தவம் அடைக் கப்பெற்ற எளிமையையும் எண்ணி, இறைவரது திருக்குறிப்பறியாது நாம் மறைக்க த.வந் திறக்கப்பாடி யது தவறு எனத் திருநாவுக்கரசர் கருதினமையே அவர் கொண்ட மனக்கவலைக்குரிய காரணமாகும். நாவுக்கரசர் வேண்டிய வண்ணம் மறைக்காட்டீசர் விரைவில் திருக்கதவந் திறக்கத் தாழ்த்தமைக்குரிய உண்மையான காரணம், அப்பரடிகள் பாடிய செந்தமிழ்ப் பாடல்களின் சுவைநலங்களைத் தாம் துய்த்து மகிழ்தல்வேண்டும் என்னும் பெருவேட்கையே யாமென்பது,