பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

பன்னிரு திருமுறை வரலாறு


பண்ணினேரு மொழியாளென் றெடுத்துப் பாடப்

பயன்துய்ப்பான், தெண்ணி ரணிந்தார் திருக்காப்பு நீக்கத் தாழ்க்க

என வரும் சேக்கிழார் வாய்மொழியால் இனிது விளங்கும்,

இனி, திருதாவுக்கரசர் தாம் முன்னரே உணர்ந்து கொள்ளாத இறைவனது திருக்குறிப்பாக எதனேக் கருதினர் என ஆராய்தலும் இன்றியமையாததாகும். " ஒருவர் பால் ஒன்றைக்குறித்து வேண்டுவோர், அப் பொருள் நலங் குறித்துத் தம் உள்ளத்தில் நன் ருகச் சிந்தித்த பின்னரே அதுபற்றிய தம் வேண்டுகோளைத் தெளிவாக வெளியிடும் ஆற்றல் பெற்ருேரா வர். பண்டை நாட்களில் மறைகளால் அடைக்கப்பெற்று நெடுங்காலமாகத் திறக்கப்படாதிருந்த திருக்க த வினேத் திறந்து நேர்முக வாயில்வழியே சென்று மறைக் காட்டீசரை வழிபடுதல் வேண்டும் என முதன் முதலில் தெளிவாக எண்ணியவர் திருஞானசம்பந்தப்பிள்ளேயா ராதலின், அப்பெருந்தகையார் என்னேக்காட்டிலும் செந்தமிழ்நலஞ் சிறக்கப்பாடித் திருக்க தவினே அடைப் பித்தருளினர். அவரே திறக்கப்பாடுதற்குரிய உரிமையும் ஆற்றலும் உடையவர். இங்ங்னமாகவும் இதுபற்றிச் சிறி தும் எண்ணுத எளியேன், அன்பிற் சிறந்த ஆளுடைய பிள்ளேயாரது வேண்டுகோட்கிசைந்து மறைக்கத வினைத்திறக்கப்பாடியது என் மனத்தொடு பொருந்திய உறுதியான வேண்டுகோளாகாது. என்மனத்திற் பதி யாத நிலையில் மறைக் காட்டிறைவரை நோக்கிக் 'கண்ணிலுைமைக் காணக் கதவினத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே' எனவும் அரக் கனே விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கமொன்றிலீர் எம்பெருமா னிரே எனவும் வருந்தி வேண்டியது, இறைவனது திருக்குறிப்பினை யுணராமையாற் செய்த பிழையாகும். இங்ஙனம் பிழையாக நடந்துகொண்ட எளியேனது வெற்றுரையினையும் மெய்யான வேண்டுகோளாக இறைவன் ஏற்றுக்கொண்டு மறைக்க தவினத் திறந்