பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

பன்னிரு திருமுறை வரலாறு


பூத்தாருங் குழலாள் பரவையிவள் தன்முகப்பே கூத்தா தந்தருளாய் கொடியேனிட்டளங் கெடவே,

என்னும் ஒன்பதாந் திருப்பாடலேப் பாடிய அளவில் இறைவரருளால் பொன் திரள் குளத்தில் அகப்பட்டது. அப்பொன்னேக் கண்ட சுந்தரர் , அதனேயும் முன் மாற்றறியக் கொணர்ந்த மச்சத்தையும் உரை கல்லில் உரைத்துப் பார்த்தபொழுது பொன் உரையில் தாழ்ந்து கானப்பட்டது. அது கண்ட சுந்தரர் இறைவனே மீண்டும் பதிகம்பாடிப் பரவினர். திருவருளால் அப் பொன் மாற்றுயர்ந்து விளங்கியது. அதனைக் கொண்டு கரையேறிய வன்ருெண்டர், பொற்குவையினை ஏவ லாட்கள் மூலம் பரவையார் மாளிகைக்கு அனுப்பி விட்டுப் பூங்கோயிலமர்ந்த இறைவரை வணங்கிப் பரவையாருடன் திருமாளிகையை யடைந்து இறைவ இது திருவருட்டிறத்தை யெண்ணி மகிழ்ந்திருந்தார்.

“ஆற்றிலே யிட்டுக் குளத்திலே தேடுதல் என்பது, தமக்குரிய பொருளேப் பெறுதற்குரிய செய்வகையுண சாது மதிகெட்டு அலேயும் பேதையரது செயலேக் குறித்து வழங்கும் பழமொழியாகும். இப்பழமொழியை ஆற்றிற் கெடுத்துக் குளத்தினில் தேடிய ஆத ரைப் போல்’ எனத் திருநாவுக்கரசடிகள் திருநல்லூர் த் திருவிருத்தத்தில் உவமையாக எடுத்தாண்டுள்ளார். உலகியற்பெற்றியை யுணர்த்தும் இப்பழமொழியின் ஆற்றலையும் இறைவன் திருவருட்டுனையினுல் மாற்றி விடலாமென்பது நம்பியாரூசர் துணியாகும். இத்துணி பினே உலக மக்களுக்கு உணர்த்தும் பொருட்டே திருமுதுகுன்றர் அளித்த பன்னிராயிரம் பொன்னேயும் மணிமுத்தாற்று நீருட் புகவிட்டு அப்பொன்னே யாவ கும் காணத் திருவாரூர்க் குளத்தில் எடுத்துக்காட்டத் திருவுளங்கொண்டார் எனக் கருதவேண்டியுளது.

  • அன்றெனே வலிந்தாட்கொண்ட அருளிதில் அறிவேன் எனறு, பொன்திரள் எடுத்து நீருட் புகவிட்டுப் பேசதுகின்ருர்