பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாறு : {} լ

என வரும் சேக்கிழார் வாய்மொழி இக்கருத்தினத் தெளிவுபடுத்தல் காணலாம். இறைவனது திருவருட் டிறத்தை விளக்க நம்பியாரூரச் செய்த இவ் வற்புத் நிகழ்ச்சியை,

செழுநீர் வயல்முது குன்றினிற் செந்தமிழ் பாடிவெய்ய மழுநீள் தடக்கையன் ஈந்தபொ ன் ஆங்குக் கொள்ளாது

வந்தப்

பொழில் நீள் தருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங்

கொண்டோன்

கெழுநீள் புகழ்த்திரு வாரூரனென்று நாங் கேட்பதுவே.

என வரும் திருத்தொண்டர் திருவந்தாதியில் நம்பி யாண்டார் நம்பி தாம்கேட்ட பழைய வரலாருகக் குறித்துப் போற்றியுள்ளார்.

இறைவன் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள ஏனத் திருத்தலங்களேயும் வழிபட்டு மகிழ எண்ணிய நம்பியாரூரர், ஆரூரிறைவர்.பால் விடைபெற்று நள் ளாறு, கடவூர் வீரட்டம், திருமயானம், வல்ம்புரம் சாய்க்காடு, வெண்காடு, நனிபள்ளி, செம்பொன் பள்ளி, நின்றியூர், நீடூர், திருப்புன்கூர் ஆகிய தலங்களே யிறைஞ்சித் திருக்கோ லக்காவின் எல்லேயை யடைந் தார். அப்பொழுது சிவபெருமான் அவர்க்கெதிரே தோன்றிக் காட்சிகொடுத்தருளினர். அத்தெய்வக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த சுந்தரர், திருஞானசம்பந் தப் பிள்ளேயார் தம்முடைய மெல்லிய கை களால் தாள மிட்டு இன்னிசை த கருப்பதிகம் பாடியது கண்டு இரங் கிய திருக்கோலக்கா இறைவர் பிள்ளையார்க்குத் திருத் தாளம் அளித்தருளிய செய்தியை,

நாளுமின்னிசை யாற்றமிழ் பரப்பும்

ஞானசம்பந்தனுக்குல கவர் முன் தாளம் ஈந்து அவன்பாடலுக் கிரங்குந்

தன்மையாளனே என்மனக் கருத்தை