பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுறை கண்டது 15

திருத்தொகை என்னும் ஆறு பிரபந்தங்களையும், திருநாவுக்கரச நாயனர் மீது திருவேகாத சமாலே யென்னும் பிரபந்தத்தையும் இயற்றி மன்னனது விருப் பிற்கிணங்கத் தாம் பாடிய இப் பிரபந்தங்களையும் பதினெராந் திருமுறையிலே சேர்த்தருளினர்.

தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய பண்முறை யினேத் தெரிந்து இசையமைக்க எண்ணிய சோழ மன்னனும் நம்பியாண்டார் நம்பியும் தி ல் லே க் கு மேற்கேயுள்ளதும் திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந் தருளியதுமாகிய திருவெருக்க த்தம்புலியூரையடைந்து, இறைவன் திருக்கோயிலே வலம் வந்து திருமுன் நின்று * எம்பெருமானே தேவாரத் திருப்பதிகங்களுக்குரிய இன்னிசையினே 6 வ் க ளு க் கு உணர்த்தியருளுதல் வேண்டும் என இறைஞ்சிப் போற்றினர். அந் நிலை யில் திருநீலகண்டப் பெரும்பாணர் மரபிலே பிறந்த பெண்ணுெருத்திக்கு இசைத்திறனேயளித்துள்ளோம் : என்று ஒர் அருள் வாக்குத் தோன்றியது. அதுகேட்டு அப்பாடினியாரை அழைத்துவந்து கோயில் வாயிலில் நிறுத்தினர். அவ்வளவில் இவளேத் தில்லேயம்பலத் திற்கு அழைத்துச்சென்று அங்குத் தேவாரத் திருப் பதிகங்களுக்குப் பண்ணடைவு வகுக்கக் கடவீர்’ என மீண்டும் ஒர் அருள்மொழி யெழுந்தது. அதனேக் கேட்ட சோழ மன்னனும், நம்பியாண்டார் நம்பியும் அவ்வம்மையாரைத் தி ல் லே ய ம் ப ல மு ன் றி லி ல் அழைத்து வந்து தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பண் வகுக்கச் செய்தார்கள். அங்ங்னமே தேவாரப் பண் களுக்குரிய க ட் ட ளே க ள் வரையறுக்கப்பெற்றன. இறைவன் திருவருட்டுணே கொண்டு அம்மையார் வகுத்த இசைமரபே தேவாரத் திருப்பதிகங்களுக்குப் பொருந்திய தெய்வ இசையாகத் தென்னுட்டிற் சிறப்புற்று வளர்வதாயிற்று.