பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

பன்னிரு திருமுறை வரலாறு


திருமுறைகண்ட சோழன்

இவ்வாறு நம்பியாண்டார் நம்பியின் துணை கொண்டு தேவாரத் திருமுறைகளேத் ேத டி த் தொகுத்த சோழவேந்தன், திருவாரூர்த் தியாகேசப் பெருமானே வழிபட்டு ஆட்சி புரிந்தவனென்றும், இராசராசன் அபயகுலசேகரன் என்னும் பெயர்களே யுடையவனென்றும் தி ரு மு ைற க ண் ட புராணம் கூறும். ஆயுமறை மொழிநம்பி யாண்டார் நம்பி அருள் செய்த கலித்துறை யந்தாதி தன்னேச், சேய திருமுறை கண்ட ரா சராசதேவர் சிவாலய தேவர் முதலாயுள்ள, ஏ.ய கருங் கடல் புடை சூழுலகமெல்லாம் எடுத்தினிது பாராட்டிற்று என்பர் அந்நூலாசிரியர். எனவே திருமுறைகண்ட சோழன் இராசராசனென் னும் பெயருடையவனென்பது, அந் நூலாசிரியர் கருத் தென்பது நன்கு புலனுகின்றது.

இராசராசன் என்னும் பெயருடைய சோழமன்னர் மூவர் இருந்திருக்கிருர்கள். இம்மூவர்களேயன்றி வீரராசேந்திரன், விக்கிரமன் முதலிய சோழ மன்னர் களும் பாண்டியரிற் சிலரும் தம்மை இராசராசன் எனக் கூறிக்கொள்வதைக் கல்வெட்டுக்களிற் காண் கின்ருேம். எனவே இராசராசன் என்னும் இப்பெயர் அக்காலத்தில் ஒவ்வொருவர்க்கேயுரிய இயற் பெயராக வும் அரசர் பலர்க்கும் உரிய பொதுப்பெயராகவும் வழங் கியதெனத் தெரிகின்றது. இனி இவ்வேந்தனுக்கு அபய குலசேகரன் என்ற மற்ருெரு பெயரும் வழங்கியதாகத் திருமுறைகண்ட புராணம் கூறும். அபயன் என்னும் பெயர் முதற் குலோத்துங்க சோழனேயும் அவனுடைய பேரன் இரண்டாங் குலோத்துங்க சோழனேயுங் குறித்து வழங்கியுளது. இதுகாறும் ஆராய்ந்து கண்ட அளவிற் குலசேகரன் என்ற பெயர் சோழ மன்னருள் ஒருவர்க் கும் வழங்கியதாகத் தெரியவில்லே. குலசேகரன் என்னும் பெயருடைய சேரமன்னரும் பாண்டிய மன்னரும் இருந்தனரென்பது கல்வெட்டுகளாலும்