பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-1 முதல் 7 வரை.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

பன்னிரு திருமுறை வரலாறு


சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக் கெந்தை பிரானரை என்றுகொல் எய்துவதே,

என்ற திருப்பதிகத்தைப் பாடிக்கொண்டு காஞ்சியி விருந்து புறப்பட்டுத் தொண்டை மண்டலத்தைக் கடந்து திருவா மாத்துரை யடைந்து செந்தமிழ் மாலே யாற் போற்றிசைத்துத் திருநெல்வாயில் அரத்துறை யிறைவரைப் பணிந்து கல்வாயகில் என்னும் சொன் பாலே பாடித் துதித்துப் பல தலங்களேயிறைஞ்சிச் சோழ மண்டலத்தை யடைந்து அடியார்கள் எதிர்கொண் டழைக்கத் திருவாவடுதுறையை யடைந்தார். அந் நிலயில் அவர் மேனியிற் புகர்நோய் (மேக நோய்) தோன்றி வருத்தியது.

திருவாவடுதுறைத் திருக்கோயிலே வலம் வந்து வணங்கிய சுந்தரர், மாசிலாமணி யீசர் திருவடிகளே யிறைஞ்சி நின்று அமரர்கள் தலைவனுகிய பெருமானே கண்ணுேயுடன் உடல் நோயும் தொடர்ந்து என்ன வருத்துதலால் கருத்தழிந்து கலங்குகின்றேன். நின்னே யன்றி எனக்கு உறவாவார் வேறுயாருளர் ?’ என வின வும் நிலையிற் கங்கைவார் சடையாய் என வரும் திருப்பதிகத்தினேப் பாடிப் போற்றினர்.

'கண்ணிலேன் உடம்பில் அடுநோயாற்

கருத்தழிந்து உனக்கே பொறையானேன் '

என இப்பதிகத்தின் இரண்டாந் திருப்பாடலிற் குறிப் பிடுதலால் இவர் கண்ணுேயுடன் உடற்பிணி யொன்றி குலும் வருத்த முற்றமை நன்கு பெறப்படும்.

உடற்பிணி நீங்கப்பெறுதல் மாசிலாமணி யீசரை அன்புடன் வழிபட்ட வன் ருெண்டர் திருத்துருத்தியை யடைந்து இறைவரைப் பணிந்து அடியேனது உடம்பிற் பொருந்திய இந் நோயை ஒழித்தருள வேண்டும் என வேண்டிக்